• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-28 21:07:24    
உயிரின வாழ்க்கை கிராமம்

cri

அமெரிக்காவின் நியுயோர்க் மாநிலத்தின் இஸாக்காவிலுள்ள உயிரின வாழ்க்கை கிராமமானது, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் குடியிருப்புப் பிரதேசமென புகழ் பெற்றுள்ளது. இங்குள்ள அனைத்து கட்டிடங்களும் சூரிய வெப்ப ஆற்றல் கட்டடங்களாகும். கட்டிடத்தின் தெற்கு பக்கத்தில் எழில் மிக்க கண்ணாடி சுவர் உண்டு. அதன் முன்னே செயற்கைக் குளங்கள் உண்டு. பொது வீடு எனப்படும் கட்டிடத்தின் உச்சியில் கொடிகள் வளர்கின்றன. இத்தகைய செடிகொடிகள் இரைச்சலை குறைக்க துணைபுரியும்.

பொது மக்கள், இந்தப் பொது வீட்டில் சந்தித்துப் பேசுவதும், பாடம் நடத்துவதும் ஓய்வெடுப்பதும் உண்டு. இங்கிலிருந்து வெளியே வந்து பார்த்தால் ஒரு நடை பாதை காண முடியும். இந்நடை பாதையின் இரு மருங்கிலும் மர வீடுகளால் வரிசை வரிசையாக நிற்கும் இரண்டு குடியிருப்பு பிரதேசங்கள் உண்டு. குடியிருப்புப் பிரதேசங்களுக்கு பின்புறத்தில் தான் கார்கள் நிறுத்தப்பட முடியும்.

இதன் விளைவாக குடியிருப்புப் பிரதேசங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக விளையாட முடியும். நிலத்தைச் சிக்கனப்படும் பொருட்டு இங்கு கட்டப்பட்டிருக்கும் 60 வீடுகள் நெருக்கமாகவும் வரிசை வரிசையாகவும் அமைந்துள்ளன. எரியாற்றலைச் சிக்கனப்படுத்தும் வகையில், அனைவரும் பொது சுவரைக் கூட்டாக பயன்படுத்துகின்றனர்.

என்பது வயது மூதாட்டி வங்கியைக் கொள்ளையடிப்பது

வட இத்தாலியின் ஜெநெயா நகரில் அண்மையில் ஒரு வங்கி கொள்ளை அடிக்கப்பட்டது. 80 வயதான மூதாட்டி ஒருவள், வங்கியிலிருந்து கடன் வாங்க முற்பட்டாள். அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின், கத்தியைக்கொண்டு வங்கியைக் கொள்ளையடிக்கப்போவதாக மிரட்டினாள். அவள் மீது வழக்கு போடப்படுமா என்பது இது வரை தெரியவில்லை.

கடவுள் எனும் கையொப்பம் தடைவிதிக்கப்படும்

அண்மையில் அமெரிக்காவில் ஒரு ஆண், வாக்காளர் பதிவேட்டில் கடவுள் எனும் பெயரிட்டு கையெழுத்திட்டார். விரைவில் இப்பெயரைத் திருத்தா விட்டால் அவருடைய ஓட்டுநர் லைசன்ஸ் நீக்கிவிடப்படும் என்று அதிகாரிகள் அவரை எச்சரித்தனர். ஏன் என்று புரிந்து கொள்ளதாததால் தம்முடைய புகார் கடிதத்தில் கடவுள் எனும் பெயரை தொடர்ந்தும் கையெழுத்திடுவதாக அவர் கூறினார்.

முப்பத்தி மூன்று ஆண்டுகள் தூக்கம் வராதவர்

வியட்நாமின் குவாங் நம் மாநிலத்தில் 64 வயதான மூதாட்டி ஒருவள் முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முன் கடும் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார். அப்போது முதல் ஒரு விசித்திரமான தூக்கம் வராத நோயால் அவதிப்படுகிறார். 1973ம் ஆண்டு முதல் அவர் ஒரு நாள் கூட நித்திரை செய்தது இல்லை. மருந்து உட்கொண்டாலும் பயன் இருக்காது. அன்றி, அவர் கடந்த 33 ஆண்டுகளாக தூங்காமல், நோய்வாய்படாமல் உடல் நலமாக இருப்பதற்கு இது வரையிலும் ஒரு புதிராக இருக்கிறது.

விண்வெளி ஆடை போட்ட பெண்மணி

பிரிட்டனில் சாசா வில்சென் என்னும் பெண்மணி ஒருவள், சிறுவயதிலிருந்தே, சூரிய ஒளிக்குப் பயப்படுகிறார். வெயில் பட்டதும் அவர் தோலில் நீர் கொப்புளங்கள் ஏற்படும். ஆதலால் அவள் பல்லாண்டுகளாக வீட்டிற்குள்ளேயே வாழ வேண்டியுள்ளது. அண்மையில் ஒரு அமெரிக்க அறநிலை அமைப்பின் உதவியுடன் விண்வெளி ஆடையைப் பெற்றுக்கொண்டார். இதனால் அவர் இப்போது சூரிய ஒளிக்கு பயப்படாமல் வெளியே வர முடிந்தது.