• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-28 11:31:47    
நோயர்களின் கருத்துக்களும் முன்மொழிவுகளும்

cri

வளவனூர் முத்துசிவக்குமரன் ஏப்ரல் ஏழாம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சி பற்றி எழுதிய கடிதம். பேங்க் ஆஃப் இந்தியாவின் அலுவலர் திரு.கிருஷ்ணமூர்த்தியுடன் நடைபெற்ற உரையாடல் சுவயாக இருந்தது. புதிதாக ஒரு வெளிநாட்டு வங்கி சீனாவில் தனது சேவையை தொடங்கும்போது, அதற்காக சீன தரப்பில் தாமாகவே முன்வந்து என்னென்ன உதவிகள் தேவை எனக் கேட்டு அதற்கான முன்னேற்பாடுகளை செய்து உதவியதைக் கேட்டபோது சீனாவின் மீதான மரியாதை அதிகமாகிறது. திரு.கிருஷ்ணமூர்த்தியின் உரையாடலின் மூலம் கூட்தலாக தெரிந்து கொண்ட ஒரு செய்தி, சீனர்கள் பாடி லேங்குவேஜ் (உடல்மொழி). எதைக் கூறினாலும் அதை அபிநயத்துடன் பாடி லேங்குவேஜ் மூலம் சீனர்கள்

வாணி: அடுத்து இலங்கை கிணிகத்தேனை வி.மூர்த்தி எழுதிய கடிதத்தில் ஏப்ரல் 26ம் நாள் இடம்பெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சீனாவில் ஈமச்சடங்கு பற்றி விளக்கப்பட்டபோது, எனது நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை கிடைத்த மகிழ்ச்சி ஏற்பட்டது. சகோதரர் நிகழ்ச்சியில் கூறியதுபோல பொதுவாக தமிழினத்தில் கிறித்தவ சமயத்தினர் இறந்தவர்களை புதைக்கின்றனர், இந்து சமயத்தவர்கள் எரிக்கின்றனர். இலங்கைத் தமிழர்களும் இதே சடங்கு முறையைத்தான் பின்பற்றுகின்றனர். சீனாவிலும் இதேபோல இறுதிச் சடங்கு முறை என்பது வியப்பளிக்கிறது. நல்லதொரு நிகழ்ச்சியை வழங்கிய தமிழ்பிரிவிற்கு நன்றிகள் என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: தொடர்ந்து நாமக்கல் ராசிபுரம் ஏ.முருகேசன் எழுதிய கடிததில் ஏப்ரல் 27ம் நாளன்று ஒலிபரப்பான அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் உடல் திசுக்களிலிருந்து செயற்கையாக சிறுநீரகம் தயாரிப்பது பற்றிய செய்தியை கேட்டோம். தொடர்ந்த நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் ஐபோ பழங்களை எவ்வாறு சாப்பிடவேண்டும் என்று கலையரசி அவர்கள் எடுத்துக் கூறினார். நான் கூட திராட்சை, பேரிச்சை போன்ற பழங்களை அப்படியே சாப்பிடுவேன். ஆனால் இந்நிகழ்ச்சியைக் கேட்டபிறகுதான் பழங்களை எப்படி சாப்பிடவேண்டும் என்பதை அறிந்துகொண்டேன். நிகழ்ச்சி குறுகியதாக இருந்தாலும் பயனுள்ளதாக அமைந்தது என்று எழுதியுள்ளார்.