• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-06-29 19:47:45    
பீங்கிங் பல்கலைக்கவகத்தில் இந்திய விழா

cri

இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் கிளீட்டஸும் கலையரசியும் சென்னை எஸ் ரேணுகாதேவி கேட்ட கேள்விகளுக்கு விடை அளிக்கின்றார்கள்.

கிளீட்டஸ்.....எஸ் ரேணுகாதேவி அவர்தம் முதலாவது கடிதத்தில் சீன இந்திய உறவு எப்பொழுது ஏற்பட்டது பற்றி கேட்கிறார்.

கலை.....இந்த கேள்வி சீன-இந்திய வரலாற்றை அறிந்தவர்களை பொறுத்தவரை பிரச்சினை இல்லை.

கிளீட்டஸ்....ஆமாம். சீனாவும் இந்தியாவும் பண்டைய நாடுகளாகும்.

கலை.....இரு நாடுகளின் நட்பு எழுத்து மூலம் பதிவு செய்து 2000 ஆண்டுகளை தாண்டியுள்ளது. கடந்த 2000 ஆண்டுகளில் இரு நாட்டு பண்பாட்டு பரிமாற்றம் போதியளவில் வளர்ந்துள்ளது.

கிளீட்டஸ்.....கி.மு 2ம் நூற்றாண்டில் சீனாவின் ஹெம் வம்சகாலத்தில் தூதாண்மை அதிகாரிகளும் வணிகர்களும் சீனாவிலிருந்து மேலை நாடுகளுக்குச் செல்லும் பட்டு பாதை வழியாக அமைந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். சீனாவின் வணிக பொருட்களும் சீன பண்பாடும் இந்தியா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு பரவின.

கலை....கி.மு. முதலாவது நூற்றாண்டு அளவில் இந்திய புத்த மத பண்பாடு சீனாவுக்கு பரவியது. இது சீனாவில் வெளிக்கொணரப்பட்டு சீன பண்பாட்டில் ஒரு பகுதியாக வளர்ந்துள்ளது. சீனாவிலுள்ள இந்திய தூதர் நலீன் சூரியெ சீன-இந்திய பண்பாட்டு பரிமாற்றத்தை உயர்வாக மதிப்பிட்டுள்ளார். அவர் கூறியதாவது.

கிளீட்டஸ்......இந்தியா போல சீனாவுக்கும் பண்படைய பண்பாட்டு பாரம்பரியம் உண்டு. நாம் இரு நாடுகளின் பண்பாட்டு பாரம்பரியத்திற்கிடையில் மிக பல ஒத்த கருத்துக்கள் நிலவியுள்ளன. அண்டை நாடுகளாகிய நாம் பரஸ்பரம் கற்றுக் கொள்ள கூடிய அம்சங்கள் பல காணப்படுகின்றன. பல துறைகளில் கற்றுக் கொள்ளக் கூடிய அம்சங்கள் உண்டு. பண்பாடு, கல்வி. சுகாதாரம், பொருளாதாரம் முதலிய துறைகளில் பரஸ்பர அனுபவங்கள் ஒன்றுக்கு ஒன்று மிக முக்கியமானவை என்றார் அவர்.

கலை.....பண்டைய பரிமாற்ற பண்பாடு, புத்த மதம் ஆகியவை பற்றி தூதர் நலீன் சூரி குறிப்பிட்டார். மத பரிமாற்றம் பற்றி குறிப்பிட்ட போது இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங் 2005ம் ஆண்டில் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது சிறப்பாக ஹுநான் மாநிலத்திலுள்ள பைமாஸு கோயிலுக்குச் சென்று பார்வையிட்டார்.

கிளீட்டஸ்.....ஆமாம். பைமாஸ் கோயில் இந்தியாவிலிருந்து புத்த மதம் பரவிய பின்பான முதல் கோயிலாகும்.

கலை.....ஆமாம். இந்திய புத்த மதத் துறவி கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக இந்த கோயிலில் வாழ்ந்து சீன மதத் துறவிகளுக்கு புத்த மத கல்வியை கற்பித்தார். பைமாஸ் கோயிலின் வாசலுக்கு முன் இரண்டு வெள்ளை குதிரை சிலைகள் நிற்கின்றன. கோயில் வரலாற்று விளக்கத்தில் இந்திய புத்த மதம் பற்றி மிக விபரமாக கல்லில் செதுக்கப்பட்டுள்ளது.

கிளீட்டஸ்.....மத பரிமாற்ற வரலாற்றை பொறுத்தவரை சீன-இந்திய மத பண்பாட்டு பரிமாற்றம் கிட்டதட்ட 1500 ஆண்டுகளானது.

கலை.....ஆமாம். சென்னை எஸ் ரேணுகாதேவிக்கு தவறான கருத்து உண்டு. ஆகவே சீன இந்திய நட்புறவை உணர்வதில் அவருக்கு குறைந்துள்ளது.

கிளீட்டஸ்......இந்த குறைபாட்டினால் தான் சீனர்கள் பயங்கரவாதிகள் என்று தவறாக அவருடைய தந்தை அவருக்கு சொல்லி தந்தார்.

கலை.....இது நூற்றுக்கு நூறு தவறானது. சீனா பொறுப்புள்ள நாடு. சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையில் ஆழந்த நட்பார்ந்த பண்பாட்டு உறவு உண்டு. 1946ம் ஆண்டில் சீனாவில் புகழ் பெற்ற பீக்கிங் பல்கலைக்கழகத்தில் கீழை மொழித் துறை நிறுவப்பட்ட போது இந்தியவியல் தொடர்பான நிபுணர்களான ச்சி சியென் லின், கிங் க்க மு முதலியவரின் முயற்சியுடன் நவீன முக்கியத்துவம் வாய்ந்த இந்தியவியல் ஆய்வு மற்றும் கல்வி சீனாவில் வளர்ந்து சாதனை பெற்றுள்ளது. 2004ம் ஆண்டில் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆய்வு மையம் நிறுவப்பட்ட போது அப்போது சீனாவில் பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் இந்திய தலைமை அமைச்சர் வாஜ்பாய் மையத்தினை துவக்கத்தை திறந்து வைத்தார்.