
லோப இனத்தவர்
லோப இனத்துக்கு தனியாக ஒரு சொந்த மொழி உண்டு. இருப்பினும் எழுத்துகளில்லை. நீண்டகாலமாக மலைகளில் வாழ்ந்து வருவதினால், லோப இன மக்களின் குடியிருப்பின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் பின்தங்கிய நிலையில் இருந்தது. 1959ம் ஆண்டு திபெத்தில், ஜனநாயக சீர்திருத்தம் நடைபெற்று, பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்ட பின் இந்த நிலைமையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டது. அப்போது முதல், திபெத்தின் இதர சிறுபான்மை தேசிய இனங்களைப் போல, லோப இனமும் சம அரசியல் உரிமை, பொருளாதார உரிமை மற்றும் தனிநபர் சுதந்திர உரிமையைப் பெற்றுள்ளனர்.
ஸியோ ஹாங்கின் மூன்று அண்ணன்களும் பள்ளி போகும் வாய்ப்பை பெறவில்லை. இப்போது உள்ளூரில் வேளாண்மை வேலையில் ஈடுபடுகின்றனர். அவரது தமக்கையும் அவரும் கட்டாயக் கல்வி பயின்றனர். இது மட்டுமின்றி, அவர்களுடைய உணவு உடை பிரச்சினைக்கும் அரசு பொறுப்பேற்கின்றது. முன்னோடிகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கையில், லோப இனத்தவர்களின் இன்றைய வாழ்க்கையில் மிகப் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் சொன்னார். அவர் கூறுகிறார்:
"வாழ்க்கை முறை பெரிதும் மாறி விட்டது. முன்பு, லோப இன மக்களின் வாழ்க்கையும் பழக்க வழக்கங்களும் பின்தங்கிய நிலையில் இருந்தன. எடுத்துக்காட்டாக, திருமணமாகும் போது, விருந்துக்காக வீட்டில் உள்ள கால்நடைகள் அனைத்தும் கொல்லப்படும். இப்போது அப்படி இல்லை. தற்போது, லோப இன மக்களின் உறைவிட மற்றும் சுகாதார வசதிகள் பெரிதும் மேம்பட்டுள்ளன." என்றார்.
மிங் லின் நகர லோப மக்கள், இப்போது மலைகளிலிருந்து வெளியேறி போக்குவரத்து வசதிமிக்க சமவெளி பிரதேசத்தில் குடியேறினர். அரசின் நிதியுதவியுடன், ஏழைக் குடும்பங்கள் வீடு கட்டின. உற்பத்தி சாதனங்களும் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும், வட்டத்திலுள்ள 11 லோப இன குடும்பங்கள் புதிய வீடுகளைக்கட்டுவதற்கு உதவியாக, அவர் மேல் நிலை அரசிடம் 4 லட்சம் யுவான் நிதிக்கு விண்ணப்பம் செய்தார்.
|