சீன வானொலி நிலையம், நேயர்களே, மூன்று ஆண்டுகளுக்கு முன், சீனாவின் யின் யே பெய்சிங்கில் என்ற யூச்சி யோகா உடல் பயிற்சி மையத்தை துவக்கினார். சுறுசுறுப்பான மாநகரில், சூரிய ஒளியில் யோகாசனம் முயற்சி செய்வதை முன்வைத்துள்ளார். இன்றைய சீன மகளில் நிகழ்ச்சியில், இந்த யூச்சி யோகா உடல் பயிற்சியை துவக்கியர் யின் யேனை அறிமுகப்படுத்துகிறோம். வழங்குபவர் விஜயலட்சுமி。 கடநித சில ஆண்டுகளாக, யோகா, ஒரு விளையாட்டு பயற்சி முறையாக, பெய்சிங்கில் படிப்படியாக பரவலாக்க வருகிறது. யின் யேயின் யூச்சி யோகா பயிற்சி மையம் மிக புகழ்பெற்றது. பல்வேறு ஃபச்சின், நலவாழ்வு இதழ்களிலும், வீதி, தலைப்படி இருப்புப்பாதை ஆகியவற்றில் விளம்பரங்களிலும் இளம் இந்திய யோகா பயிற்சியாளர் மோகன், வெள்ளை ஆடையில், வெவ்வேறான யோகா வடிவங்களில் தெளிவான கண்களுடன் இருப்பது காணப்படலாம்.
இதன் விளைவாக, யோகா உடல் பயிற்சி, மக்களின் மனதில் படிப்படியாக பதிந்து வருகிறது. 3 ஆண்டுகளுக்கு முன் முதலாவது யூச்சி யோகா உடல் பயிற்சி வையம், பெய்சிங்கின் பண்டைய ri tan zhong lou எனும் இடத்தில் துவங்கியது முதல் இது வரை, நாடு முழுவதிலும் 6 இளைகள் மற்றும் 10 கூட்டு கிளைகள் யூச்சி யோகா உடல் பயிற்சியில் ஈடுபடுகின்றன.
தவிரவும் 500க்கு அதிகான யோகாசன ஆசிரியர்கள் நாட்டின் மற்ற இடங்களுக்கு அனுப்பட்டனர். யூச்சி யோகாசனத்தின் தலைமையகம், பெய்சிங்கின் கிழக்கு பகுதியிலுள்ள அழகான காட்சியுடன் கூடிய chaoyang பூங்காவில் அமைகின்றது. இங்கே, யின் யே செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். இனி, வெற்றி பெறுவது மட்டும், வாழ்க்கையின் ஒரே ஒரு இலக்கு அல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சிகரமாக வாழ வேண்டும் என்பது எங்கள் வாழ்க்கையின் இலக்காகும். சீனா இப்போது இந்த கண்ணேட்டத்துடன் முன்னேற்ற மடைகின்றது. யோகா உடல் பயிற்சி என்ற வகையில், ,
பிற விளையாட்டு பயிற்சிகளை காட்டிலும் வேறுப்பட்டது. உடலளவில் மேம்படுத்தப்படுவதோடு, உணர்வு ரீதியிலும் மேம்படுத்தப்பட்டு, மகிழ்ச்சியான அமைதியான நிலையை நீங்கள் பயிற்சி மூலம் உணரலாம். தற்போது சமூகத்தின் விரைவான வளர்ச்சி அழுக்கமும், போட்டி ஆற்றலும் அதிகமாகியுள்ளன. உடல் நலம் பற்றாகுறையில் உள்ளது. யோகா மூலம் இந்த உடல் நல நிலையை பயனுள்ள முறையில் மேம்படுத்தலாம் என்றார் அவர்.
|