சிங்காய்-திபெத் ரெயில் பாதை போக்குவரத்து
cri
இன்று போக்குவரத்துத் தொடங்கியுள்ள சிங்காய்-திபெத் ரெயில் பாதை, தென்மேற்கு சீனாவின் எல்லைப்புறத்திலுள்ள திபெத்தின் சமூக-பொருளாதார ஒட்டுமொத்த வளர்ச்சியில் புதிய கட்டத்தைத் தந்துள்ளது என்று “மக்கெள நாளேட்டின்” தலையங்கம் கூறுகின்றது.
இது வரை சீனாவில் ரெயில் பாதை இல்லாத ஒரே ஒரு வட்டாரமாக திபெத் இருந்து வந்தது. வெளி உலகுடன் தொடர்பு கொள்வதற்கு இது கடுமையான தடையாக இருந்தது. சிங்காய்-திபெத் ரெயில் பாதை மூலம், திபெத்தின் சுற்றுலா வளர்ச்சியடைவதோடு, பல்வேறு தேசிய இனங்களுக்கிடையிலான தொடர்பும் ஒருங்கிணைப்பும் ஏற்படும் என்று தலையங்கம் கருதுகின்றது.
|
|