ச்சிங்ஹை-திபெத் ரயில் பாதை
cri
இன்று காலை ச்சிங்ஹை மாநிலத்தின் கேர்மு நகரத்திலிருந்து திபெத்தின் லாசாவுக்கு 600க்கும் அதிகமான பயணிகளுடன் ரயில் வண்டி புறப்பட்டது. உலகிலேயே மிக உயரமான ச்சிங்ஹை-திபெத் ரயில் பாதை போக்குவரத்துக்கு திறந்துவிடப்பட்டதை இது குறிக்கின்றது. கேர்மு நகரில் நடைபெற்ற கொண்டாட்டக் கூட்டத்தில் சீன அரசு தலைவர் ஹு சிந்தாவ் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். ச்சிங்ஹை-திபெத் ரயில் பாதையைப் போடுவது, தலைமுறை தலைமுறையாக சீன மக்கள் கனவு கண்ட, மிகவும் எதிர்பார்த்தத் திட்டமாகும். இத்தகைய ஒரு ரயில் பாதையைப் போதுவது, சீனாவின் ஒட்டுமொத்த திறனுக்கும் அறிவியல் தொழில் நுட்ப ஆற்றலுக்கும் ஒரு சோதனை என்பது மட்டுமல்ல, மனிதகுலத்தின் திறமைக்கும் விடப்பட்ட ஒரு சவாலாகும். இன்று சில தலைமுறை சீன மக்களின், குறிப்பாக இந்த ரயில் பாதை நெடுகிலும் வாழும் பல்வேறு தேசிய இன மக்களின் விருப்பம் இறுதியில் நிறைவேறியுள்ளது என்றார். கூட்டத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ச்சிங்ஹை மாநிலக் கமிட்டிச் செயலாளர் சௌ லோ ச்சியும், திபெத் தன்னாட்சிப் பிரதேசக் கமிட்டிச் செயலாளர் சாங் சிங்லீயும் உரை நிகழ்த்தினார்கள். இது பற்றிய விபரம் இன்றைய சிறப்புச் செய்தித்தொகுப்பில் இடம்பெறுகின்றது.
|
|