• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-02 17:36:56    
சின்காய் திபெத் ரெயில் வண்டி லாசா சென்றடைந்தது

cri

இன்று விடியற்காலை, சின்காய் மாநிலத்தின் கேர்மு நகரிலிருந்து திபெத்தின் தலைநகரான லாசாவுக்குச் செல்லும் முதலாவது பயணி ரெயில் வண்டி பாதுகாப்பாக லாசாவுக்குச் சென்றடைந்தது. அதேவேளையில், லாசாவிலிருந்து கேர்முக்குச் செல்லும் ரெயில் வண்டியும் பாதுகாப்பாக கேர்முக்குச் சென்றடைந்தது. சின்காய் திபெத் ரெயில் பாதை முழுவதும் போக்குவரத்துக்கு வந்துள்ளது என்று இது குறிக்கின்றது.


600 பயணிகளை ஏற்றிச்செல்லும் ரெயில் வண்டி கேர்முவிலிருந்து 13 மணி நேரமாக 1142 கிலோமீட்டர் தொலைவைக் கடந்து லாசா சென்றடைந்தது. லாசா ரெயில் நிலையத்தில் சில ஆயிரம் சிபெத்தின மக்கள் ஆடல் பாடலுடன் உலக கூரையைக் கடத்தி செல்லும் இந்த ரெயில் வண்டியை வரவேற்றனர். அவர்கள் மரியாதை பொருளான ஹாதா எனும்  வெள்ளை துணிகளை அவர்கள் பயணிகளுக்கு வழங்கினர்.
சீன ரெயில் துறையின் முதலாவது ஆய்வகத்தின் பணியாளர் வான் சியௌ லீ, இந்த பாதையின் உருவரைவு பணியில் ஈடுபட்டிருந்தார். அவரும் பயணிகளில் ஒருவராவார்.
எனது பங்கு உள்ள உருவரைவு உண்மையாக மாறுவதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ரெயில் பயணம் வசதியாக இருக்கிறது. பயணத்தில் பீடபூமியால் ஏற்பட்ட உடல் பாதிப்பை உணரவில்லை. சோனா ஏரி, புஃஹோ மலை, தாங்குலா மலை ஆகிய இயற்கை காட்சி ரெயில் பயணத்தில் கண்டுகளிக்கலாம் என்றார் அவர்.