• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-02 17:35:17    
சிங்காய்-திபெத் ரயில் பாதை

cri

நேற்று உலகின் கவனத்தை ஈர்க்கும் சிங்காய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. பெருநிலப்பகுதி, தைவான், ஹாங்காங், மக்கெள ஆகிய 4 இடங்களின் செய்தி ஊடகங்கள் இதை வெகுவாக பாராட்டியுள்ளன.
சீனாவில் பெரும் அதிகாரத்தை பெறும் மக்கள் நாளேடு நேற்று வெளியிட்ட ஆசிரியர் தலையங்கத்தில், சிங்காய்-திபெத் ரயில் பாதையை கட்டியமைத்தது, சில தலைமுறை சீன மக்களின் கனவாகும். சீன சமூக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய திட்டமுமாகும். ஒரு லட்சத்துக்கு அதிகமான பணியாளர்கள், பல்வேறு இன்னல்களை சமாளித்து, சிங்காய்-திபெத் ரயில் பாதை எழுச்சியை உருவாக்கினர். இந்த எழுச்சி, 130 கோடி சீன மக்களைத் தூண்டுவதற்கு வலிமைமிக்க உந்துவிசையாக உள்ளது என்று கூறியுள்ளது.
சிங்காய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது, சிங்காய் மற்றும் திபெத்தின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தைவான் செய்தி ஊடகம் கூறுகின்றது.
இந்த ரயில் பாதை திறந்து வைக்கப்பட்ட பின், திபெத்துக்கு சென்று பயணம் செய்யும் ஹாங்காங் மக்களின் எண்ணிக்கை 20 விழுக்காடு அதிகரிக்கக்கூடும் என்று "Shang Bao" எனும் ஹாங்காங் செய்தித்தாள் கூறுகின்றது.
திபெத்தில் ரயில் போக்குவரத்து மேலும் வளர்வதுடன், திபெத்துக்கும் தென் மேற்கில் உள்ள சீனாவின் அண்டை நாடுகளுக்கும் இடையே தொடர்பும் அதிகரிக்கும் என்று மக்கெள நாளேடு சுட்டிக்காட்டியுள்ளது.