• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-03 14:24:22    
சீன பாரம்பரிய மருத்துவமுறையும் மேற்கத்திய உளவியலும்

cri

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் காலிறுதி கட்டத்தில் நுழைந்துள்ளது. ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, உக்ரைன், இங்கிலாந்து, போர்ச்சுகல், பிரேஸில், பிரான்ஸ் ஆகிய எட்டு நாடுகளில் எது உலகக் கோப்பையை வெல்லப்போகிறது என்பது அடுத்த வார இறுதியில் தெரிந்துவிடும். ஆனால் அதற்குள் கால்பந்தாட்ட ரசிகர்கள், தங்களது விருப்ப அணி விளையாடும்போது, கோல் அடிப்பார்களா, எதிரணி கோல் அடித்துவிட்டால் அதற்கு மாற்றாக கோல் அடிக்க வாய்ப்பு உள்ளது, ஆட்டத்தின் இறுதி விசில் அடிக்க இன்னும் ஒரு நிமிடம்தான் அதற்கும் ஒரு கோல் அடித்து வெற்றியாக்க முடியுமா என்றெல்லாம் புலம்பி தீர்த்து மன உளைச்சலுக்கு ஆளாகப்போவது என்னவோ நிச்சயம். இது இந்த கால்பந்து உலகக்கோப்பை நிகழ்வில் மட்டுமல்ல அன்றாட வாழ்வில் நம்முடைய உணர்வு வெளிப்பாட்டால் அல்லது உணர்வுகள் வெளிப்பாடாமல் அடக்கி வைப்பதால் எழும் பிரச்சனைகள் மன உளைச்சலையும், உளரீதியில் சிக்கலையும் ஏற்படுத்தி வாழ்க்கையை சுமையாக்கக் கூடும். இதெல்லாம் எங்களுக்கு தெரிந்ததுதானே, புதிதாக எதையோ சொல்வது போல என்ன இந்த விளக்கம் என்ற கேள்வி எழுகிறதா.

சரி, உடலுக்கும், மனதிற்கும், அதாவது உடல் மற்றும் உளம் இரண்டுக்கும் தொடர்பு உண்ட என்பதையும் , நமது உணர்ச்சிகள் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என்பதையும், உடல்நலத்திற்கு சிறப்பு மருத்துவர்களும் உளநலத்திற்கு சிறப்பு மருத்துவர்களும் இருப்பதையும் நாம் அறிவோம் ஆனால் பாரம்பரிய மருத்துவத்தில் உளவியலை புகுத்தி உடல் உள்ள நலனை ஒன்றாக கையாளும் மருத்துவ முறையை அறிந்ததுண்டா? இதிலென்ன வித்தியாசம் இருக்கிறது மருத்துவம் என்றால் எல்லாம் ஒன்றுதானே என்று கேட்பவர்கள் இனி நான் சொல்லப்போவதை கூர்ந்து கவனியுங்கள்.

அதாவது சைக்காலஜி, மனோதத்துவம் அல்லது உளவியல் என்பது ஒரு தனிப்பட்ட அறிவியல் என்று ஐரோப்பிய தத்துவ அறிஞர்கள் வகுத்தனர். ஆனால் உடலுக்கும் உளத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நாளடைவில் உளவியல் தனி அறிவியலாக இருந்தபோதும் மருத்துவ இயலின் அங்கமாக கருதப்படத் தொடங்கியது. ஆனால் இன்றைக்கும் உளவியல்ரீதியிலான சிகிச்சை என்பது உளவியல் நிபுணர், ஆற்றுப்படுத்துனர் ஆகியோரால் மேற்கொள்ளப்படுகிறது, உடல்ரீதியிலான சிகிச்சை மற்ற மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுகிறது என்பது உலகறிந்த உண்மை. இந்த இரண்டு வகை நிபுணர்களும் பல வேளைகளில் ஒருவர் மற்றவரோடு கலந்தாலோசித்து சிகிச்சையளிக்கும் வழக்கமும் உண்டு. இதில் பாரம்பரிய மருத்துவத்தையும், உளவியலையும் ஒன்றிணைத்து மருத்துவம் செய்வது என்பது கொஞ்சம் புதிய விடயம்தான்.

1985ல் பாரம்பரிய சீன மருத்துவத்துறையினர் உளவியலை தங்கள் மருத்துவத்தில் உள்ளடக்கி பாரம்பரிய சீன மருத்துவ உளவியல் என்பதை அறிமுகப்படுத்தினர். அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக பெய்சிங்கிலுள்ள சீன மருத்துவச் சங்களின் உலகக் கூட்டமைப்பின் கீழ் புதிதாக சீன பாரம்பரிய மருத்துவ உளவியல் கமிட்டி நிறுவப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான், சிங்கப்பூர் அகிய நாடுகளின் சீன பாரம்பரிய மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கடந்த பல ஆண்டுகளில் சீன பாரம்பரிய மருத்துவ கருத்துக்களையும் மேற்கத்திய உளவியல் கருத்துக்களையும் ஒன்றுசேர்த்துள்ளனர். சீன பாரம்பரிய மருத்துவ பழமைவாய்ந்த குறிப்புகள், ஏடுகளில் உளவியல் என்ற வார்த்தை பயன்பாடு காணப்படவில்லை என்றாலும், உளவியல்ரீதியிலான சிக்கல்களை, பிரச்சனைகளை தீர்ப்பதில் சீன மருத்துவர்கள் நிறைய செல்வாக்கு பெற்றிருந்தனர் என்று இவர்கள் நம்புகின்றனர்.

மனித உடலின் பல்வேறு உறுப்புகள் மீதும், நோய்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி மீதும் மனித உணர்ச்சிகளின் செல்வாக்கை சீன பாரம்பரிய மருத்துவம் வலியுறுத்துகிறது. ஹுவாங் தி நேய் சிங் எனப்படும் மருத்துவத் திரட்டில் காணப்படும் விடயங்கள் இன்றைய மேற்கத்திய உளவியல் தொடர்பான கருத்துக்களும், அறிகுறிகளும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை உணர்த்துகின்றன. இந்த மருத்துவ திரட்டு பாரம்பரிய சீன மருத்துவ உளவியலுக்கான சித்தாந்த அடிப்படையிட்டுள்ளது என்கிறார் யாங் சியுலி எனும் உளவியல் ஆய்வாளர்.

சீன பாரம்பரிய மருத்துவத்தின்படி மற்ற மனிதர்களை எதிர்கொள்ளும்போது உடலுக்குள் உண்டாகும் "ச்சி" எனும் அசைவுகளே உணர்ச்சிகளாகும்.இந்த "ச்சி" அசைவுகள் அல்லது இயக்கங்கள் மனித உடலின் உறுப்புகளுக்கு ஆக்கப்பூர்வமான பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம் அல்லது அழிவுப்பூர்வமான பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம். மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து உடல் சார் நோய்களுக்கும் 7 முக்கிய உணர்ச்சிகளே காரணம் என சீன பாரம்பரிய மருத்துவம் கருதுகிறது. கோபம், அதிர்ச்சி, மகிழ்ச்சி, பயம், ஏக்கம், ஆவல் அல்லது எதிர்பார்ப்பு, துக்கம் ஆகிய உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் அதை ஒத்த நல்ல பண்பையும் தீய பண்பையும் கொண்டுள்ளன. சீன பாரம்பரிய மருத்துவர்களின் பணி நோயாளியின் நோயோடு தொடர்புடைய தீய பண்புடைய உணர்ச்சியை அதன் நற்பணுடைய உணர்ச்சியாக மாற்றுவதாகும்.

உடலுக்குள் உண்டாகும் "ச்சி" அசைவுகளை கட்டுப்படுத்தி, சீராக்கி, இசைவடைச் செய்யும் பல சீன பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைகள் இன்றளவும் பயன்படுத்தப் படுகின்றன. மூலிகை மருத்துவம் ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, அக்குபஞ்சர், இசை சிகிச்சை ஆகியவை இதில் அடங்கும். நோயின் உளவியல் மற்றும் ஆன்ம ரீதியிலான அம்சங்கள் மற்றும் சிந்தை தடுமாற்றம் ஆகியவற்றுக்கான சிகிச்சையில் மூலிகை மருத்துவம் அதிக தொடர்பு கொண்டது என்கிறார் சீன உளநோய் நிறுவனத்தின் தலைமைச் செயலர் சோ யிசுவாங். உதரணமாக மன அழுத்தம் அல்லது மனநிலை அடிக்கடி மாற்றம் ஆகியவை பொதுவாக கல்லீரலிலான "ச்சி" அசைவின் தேக்கத்தை ஏற்படுத்துகின்றன, இது நெஞ்சில் பாரமாக அல்லது கடினமான ஒரு உணர்வை ஏற்படுத்தும். இந்த கல்லீரல் 'ச்சி' அசைவை சீர்படுத்த உரிய மூலிகை மருந்து உட்கொண்டால் நெஞ்சில் பாராமாக உணர்வதை சரிசெய்யலாம்.

அதேபோல இறுக்கத்தை தளர்த்தல் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளல் ஆகியவற்றில் சீகாங் எனப்படும் ஆழ்ந்த சுவாசப்பயிற்சி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பதட்டம், மன அழுத்தம், ஃபோபியா எனப்படும் அச்சவுணர்வு நோய் ஆகியவற்றை குணப்படுத்த இந்த சுவாசப்பயிற்சி முறை நல்ல பலனிளிக்கிறதாக கூறப்படுகிறது.