"உலகின் கூரையில்" பயணி ரெயில் வண்டி
cri
பெய்சிங்கிலிருந்து லாசாவுக்குச் செல்லும் T27 முதலாவது பயணிகள் ரெயில் வண்டி இன்று காலையில், 1686 மீட்டர் நீளமுடைய கு லன் மலை சுரங்கப்பாதை வழியாகக் கடந்து சென்றது. கடந்த சனிக்கிழமை சிங்காய்-திபெத் ரெயில் பாதை, போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்ட பின்னர், சிங்காய்-திபெத் பீடபூமிக்குச் செல்லும் முதலாவது பயணி ரெயில் வண்டி இதுவாகும். இதன் மூலம், "உலகின் கூரையில்" பயணி ரெயில் வண்டி செல்லும் வரலாற்றை மனிதர்கள் துவக்கியுள்ளனர். உலகிலேயே மிக உயரமான இடத்தில், நெடுஞ்தொலைவு பயணம் செய்யும் பீடபூமி ரெயில் வண்டி, திபெத்தின் போக்குவரத்து தேவையில் 75 விழுக்காட்டை நிறைவேற்ற முடியும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். பெய்சிங், Cheng Du உள்ளிட்ட 5 நகரங்களிலிருந்து "உலகின் கூரையில்" ஓடும் பயணி ரெயில் வண்டிகள் இன்று லாசாவைச் சென்றடையும். இனி, சிங்காய்-திபெத் ரெயில் பாதை, திபெத்தின் சிகாச்சே, லின்சி முதலிய இடங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
|
|