• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-04 22:00:27    
கண்ணொளி முதலிடம் என்னும் நடவடிக்கை

cri
கிளீட்டஸ்....... "கண்ணொளி முதலிடம்" என்னும் திட்டம் ஒரு நாட்டின் நடவடிக்கையல்ல. இந்தியாவிலும் இலங்கையிலும் கண்ணோய் சிகிச்சை பற்றிய தகவல்கள் நிறைய இருக்கின்றன. சீனாவில் இது பற்றிய தகவல் உண்டா?

கலை......கண்டிப்பாக. கண்ணோய் பற்றி சொன்னீர்கள். சீனாவில் மக்களிடையே இந்த நோய் ஏற்பட்ட துன்பத்தை நீக்கும் வகையில் சீன அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் அரசின் ஆதரவுடன் "கண்ணொளி முதலிடம்" என்னும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது.

கிளீட்டஸ்.....கொஞ்சம் கூடுதலாக சொல்லுங்கள்.

கலை......62 வயதான சாயுங்சிங் என்னும் மூதாட்டி வட கிழ க்கு சீனாவின் லோநின் மாநிலத்தின் ஆன் சான் புறநகரிலுள்ள கிராமத்தில் வாழ்கின்றார். கண்புறை நோய் ஏற்பட்டு 3 ஆண்டுகளாக கண்பார்வை இழந்த அவருக்கு சமீபத்தில் இலவச அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின் அவருடைய கண்பார்வை மீட்கப்பட்டுள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது

சிகிச்சை பெறுவதற்கு முன் நான் எதையும் பார்க்க முடியாது. சிகிச்சை செய்யப்பட்ட அடுத்த நாள் என் கண்பார்வை மீண்டும் திரும்பி வந்தது. இப்போது உழைப்பில் ஈடுபடுகின்றேன். எதிர்கால வாழ்க்கை மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது என்றார்.

 

கிளீட்டஸ்.....இந்த தகவலை கேட்ட பின் எனக்கும் மகிழ்ச்சி ஏற்படுகின்றது. கடந்த 3 ஆண்டுகளில் சாயுங்சிங் மூதாட்டி போல சீனாவில் எத்தனை பேர் கண்புறை நோய் ஏற்பட்டு இலவசமாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டனர்?

கலை......சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் "கண்ணொளி முதலிடம்" என்னும் திட்டத்தால் நன்மை பெற்றுள்ளனர். இந்த திட்டம் கடந்த 80ம் ஆண்டுகளின் இறுதியில் சர்வதேச அரிமா சங்கத்தின் தலைமையில் நடத்தப்பட்டது.

கிளீட்டஸ்.........உலகில் கண்புறை நோயினால் அல்லல்பட்டவர்களின் கண்பார்வை மீண்டும் மீட்கப்படுவதற்கு உதவும் வகையில் உலகளவில் மேற்கொள்ளப்பட்ட அறநில நடவடிக்கையாகும்.

கலை......ஆமாம். 1997ம் ஆண்டின் கோடை காலத்தில்"கண்ணொளி முதலிடம்" என்னும் திட்டம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்திற்குப் பொறுப்பான செயல் தலைவர் தை யூன் கங் இது பற்றி கூறியதாவது

கிளீட்டஸ்........ஒரு குடும்பத்தில் ஒருவர் கண்புறை நோய்வாய்பட்டால் இந்த குடும்பத்தின் வாழ்க்கை தரம் குறையும். அவருக்கு அறுவை சிகிச்சை அளித்தால் அவருக்கு மட்டுமல்ல குடும்பத்தின் வாழ்க்கை தரமும் மேம்படுத்தப்படும். இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சீனராகவும் நிறுவனத்தின் உறுப்பினராகவும் நான் இந்த நடவடிக்கை சீனாவில் பரவலாக்கப்பட வேண்டும் என்று கருதுகின்றேன்.

 

கலை......திரு தை யூன் கங் அவருடைய முயற்சியில் தான் "கண்ணொளி முதலிடம்" என்னும் திட்டம் சீனாவுடன் இணைக்கப்பட்டது. தற்போது சீனாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான கண்பார்வையற்றவர்கள் வாழ்கின்றனர். ஆண்டுதோறும் சுமார் 4 லட்சம் பேர் கண்புறை நோயினால் கண்பார்வை இழக்கின்றனர்.

கிளீட்டஸ்.....இவ்வளவு மக்கள் இந்த நோயினால் அல்லல்பட்டுள்ளனர். காரணம் என்ன?

கலை..... முன்பு, சீனாவில் கண் நோய்க்கு சிகிச்சையளிக்கும் அடிப்படை வசதி பலவீனமானதால் சில கண்புறை நோயாளிகளுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட வில்லை. வறுமை காரமம் சிலருக்கு சிகிச்சை பெறும் பொருளாதார சக்தி இல்லை.

கிளீட்டஸ்..... "கண்ணொளி முதலிடம்"திட்டம் துவங்கிய பின் சீனாவில் உள்ள கண்புறை நோய்க்கு சிகிச்சை மற்றும் தடுப்பில் நிலவிய பலவீன நிலையை நீக்க சீன அரசு மாவட்ட நிலை மருத்துவ மனையில் கண் நோய் துறை நிறுவ முயற்சி செய்துள்ளது. நகரங்களில் கண்ணொளி மீட்பு துறை மேம்படுத்தப்பட்டுள்ளது. கண்நோய் துறையில் ஈடுபடும் மருத்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சீனாவின் பல்வேறு இடங்களில் கண்ணொளி மீட்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்று நான் கேள்விபட்டேன்.

கலை.......ஆமாம். நான் ஒரு உதாரணம் சொல்கிறேன். ஹோபேய் மாநிலத்தின் வாபாஃந்தியென் மைய மருத்துவ மனை மாவட்ட நிலை மருத்துவ மனையாகும். இந்த மருத்துவ மனையின் கண்நோய் துறை 1999ம் ஆண்டுக்கு முன் மிகச் சிறியதாகும். இது முகபாகங்கள் துறையுடன் இணைந்திருந்தது. கண்நோய் அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் Microscopeநுண்ணோக்கி போன்ற அடிப்படை மருத்துவ சாதனம் கூட இல்லை. .கண்புறை நோய் சிகிச்சை பெற வேண்டுமானால் நோயாளிகள் 100 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நகருக்கு செல்ல வேண்டும்.