• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-04 22:08:27    
காய்கறி அமோகம்

cri
கலை....வணக்கமே நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நேரம்.

 

ராஜா.....கலை கடந்த வாரத்தில் நூட்ஸ் பற்றி நாம் நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினோம். இன்றைக்கு என்ன வகை உணவு பரிமாறப் போகின்றோம்.

கலை......ராஜா பாருங்கள். இப்போது இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் கடுமையான கோடை துன்புறுத்துகின்றது.

ராஜா.....ஆமாம். கடுமையான வெயிலில் சோறு சப்பாத்தி போன்ற உணவு உண்பது கடினம்.

கலை....ஆகவே. வெப்பத்தை குறைக்கக் கூடிய காய்கறிகளை உண்பது உடல் நலத்திற்கு நல்லது.

ராஜா.....அப்படியானால் நாம் இன்று நண்பர்களிடம் காய்கறி உணவு சமைப்பது பற்றி அறிமுகப்படுத்தலாமே.

கலை.....மகிழ்ச்சி.

 

கலை.....இன்றைக்கு அறிமுகப்படுக்க போகின்ற பலவகை காய்கறிகளில் முக்கியமான காய்கள் மட்டுமே இருக்கின்றன.

ராஜா......அவை என்ன என்று நான் சொல்லட்டுமா?

கலை......சொல்லுங்கள்.

ராஜா.....இந்தக் காய்கறி உமவு சமைப்பதற்கு கத்தரிக்காய், காளான், கேரட், தக்காளி, புரோக்கலி எனப்படும் பச்சைக் காலிபிலாவா, குடை மினகாய், மக்காச் சோளம், இஞ்சி போன்ற காய்கள் போதும்.

கலை.....ராஜா நீங்கள் கூறிய காய்கள் தமிழ் நாட்டில் காய்கறிச் சந்தையில் தாராளமாகக் கிடைக்கும் அல்லவா?

ராஜா....ஆமாம். விலையும் அதிகம் இல்லை. ஆனால் சத்து இந்த காய்களில் சத்து நிறைய உள்ளது.

கலை... நாம் இந்த காய்களைக் கொண்டு சுவையான உணவு எப்படி சமைப்பது என்று சொல்லலாமா?

ராஜா.....காய்களின் சத்து பற்றி சொன்ன போது சமைப்பது பற்றி மறைந்து விட்டேன். சீக்கிரமாக சமைக்கும் முறை பற்றிச் சொல்லுங்கள்.

கலை.....முதலில் காய்கள் அனைத்தையும் நன்றாக தண்ணீரில் அலசி சுத்தம் செய்ய வேண்டும். பின் காளானை விசிரி வடிவத்தில் துண்டு துண்டாக நறுக்க வேண்டும்.