• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-05 17:34:43    
கருத்துக்களும் முன்மொழிவுகளும்

cri

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் எஸ். சிவராமன் எழுதிய கடிதம் இடம்பெறுகிறது. பிப்ரவரி 8ம் நாள் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பீஜிங் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் பற்றியும், கலவித்தரம் பற்றியும் கலையரசி அவர்களும், ராஜாராம் அவர்களும் வழங்கிய உரையாடலை கேட்டேன். அமெரிக்காவிலிருந்து மரபியல் பேராசிரியர்கள் வருகைதந்து மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்கின்றனர் என்பதால் தென்கொரிய மாணவர்கள் பீஜிங் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்புகின்றனர், மற்ற நாடுகளை அதன் பின்னரே தேர்வு செய்கின்றனர். உலக தரம் வாய்ந்த பலகலைககழகம் பீஜ்ஜிங் பல்கலைக்கழகம் என்பதை அன்றைய கேள்வி பதில் நிகழ்ச்சி மூலம் அறிந்தேன், தொடர்ந்த நேருக்கு நேர் நிகழ்ச்சியில் செல்வம் அவர்களின் உரை தெளிவாக கேட்க முடிந்தது என்று எழுதியுள்ளார்.

வாணி: அடுத்து பிப்ரவரி 14ம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சி குறித்து திருச்சி ஜி. பிரபாகரன் எழுதிய கடிதம். காதலர் தினம் பிப்ரவரி 14ம் நாள் என்பது உலகல் முழுதும் அறிந்தது. ஆனால் மார்ச் 14, ஏப்ரல் 14, மே 14 ஆகிய நாட்களில் நடைபெறும் விழாக்களை பற்றி கூறி லூசா அம்மையார் அசத்திவிட்டார். விழாக்கள் பற்றி அறிய சீன வானொலி தமிழ்ப்பிரிவு நிகழ்ச்சி மட்டும் கேட்கவேண்டும் என்பதை அறிந்துகொண்டேன் என்று எழுதியுள்ளார்.

க்ளீட்டஸ்: அடுத்து ஏபரல் 15ம் நாள் இடம்பெற்ற தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி திருச்சி மண்ணச்சநல்லூர் எம். முருகேசன் எழுதிய கடிதம். விரைவில் சீன மொழியைக் கற்கவேண்டும் என்ற ஆசையை அடிமனதில் தோற்றுவித்தது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி. திரு. ராஜாராம், திருமதி. கலையரசி இருவரும் நிறுத்தி நிதானமாக உச்சரிப்பதால், பச்சை மரத்தில் ஆணி அடித்ததுபோல் எளிதாக பதிந்துவிடுகிறது. பாராட்டுக்கள் என்று எழுதியுள்ளார். தொடர்ந்து இலங்கை கல்முனைகுடி நேயர் எஸ். ஐ. முஹம்மட் ஹுசைன் எழுதிய கடிதம். நீங்கள் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பயனுள்ளவையாக உள்ளன. என்னைக் கவர்ந்த நிகழ்ச்சி சீன உணவு அரங்கம். மே முதல் நாள் அன்று சீன உணவு அரங்கம் நிகழ்ச்சியில் கூறப்பட்ட இத்தாலி சூப் மிகவும் நல்ல சூப், நாங்களும் அதை செய்து பார்த்து ருசித்து மகிழ்ந்தோம். தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியின் மூலம் சீனம் கற்பதில் சில கஷ்டங்கள் உள்ளன. எனக்கு இந்த விடயத்தில் உதவிகள் தேவை என்று கேட்டுள்ளார்.