• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-05 16:44:03    
மீண்டும் திறக்கப்படும் பட்டுப்பாதை

cri

திபெத்தின் Rikaze வட்டாரத்தில் உள்ள Ya Dong மாவட்டத்தையும், இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் நாதுலா கணவாய் பாதை நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த எல்லை வர்த்தக பாதையை மீண்டும் திறக்க சீனாவும் இந்தியாவும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டன.
திபெத்-இந்தியா எல்லையில் அமைந்துள்ள நாதுலா கணவாய், கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது திபெத்தின் தலைநகர் லாசாவிற்கும், இந்தியாவின் கடலோர நகரான கோல்கத்தாவிற்கும் இடையே 400-500 கிலோமீட்டர் தொலைவு மட்டுமே. இது, "பட்டுப்பாதையின்" தென் பகுதியில் உள்ள நாதுலா கணவாய், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முக்கிய தரை வழி வர்த்தக பாதையாகும்.
நாதுலா கணவாய் மீண்டும் திறக்கப்படுவதால், சீனாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையில் தரை வழிப் பாதை ஒன்று உருவாகி விடும். சீன-இந்திய எல்லை வர்த்தகத்தை விரிவாக்குவதற்கும், இரு நாட்டு மக்கள் பயன் பெறவும் இது முக்கிய பங்காற்றும் என்று கருதப்படுகிறது.