• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-05 17:01:46    
திபெத்தில் முதலீடு செய்வது

cri
சிங்காய்-திபெத் ரயில் பாதை கடந்த சனிக்கிழமை திறந்து விடப்பட்டு, நாளை நாதுலா கணவாய் சீன-இந்திய எல்லை வர்த்தக பாதை மீண்டும் திறக்கப்படுவதால், திபெத்தின் முதலீட்டுச் சூழல் மேலும் மேம்பட்டுள்ளது. உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு திபெத்தில் கணிசமாக அதிகரிக்கும்.
திபெத்தின் சுற்றுலா, வீடு மற்றும் நில உடைமை உள்ளிட்ட தொழில்கள் விரைவாக வளரும் என்று சுற்றுலா துறை கூறுகிறது. தற்போது, திபெத்தில் விமான நிறுவனம், பண்பாட்டு பூங்கா, புவியியல் பூங்கா போன்றவற்றை உருவாக்குவதற்கு முதலீடு செய்ய, பல உள் நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.
20-30 ஆண்டுகளுக்கு முன், அடிப்படை வசதிகள், திபெத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய தடையாக இருந்தன. திபெத்தின் அடிப்படை வசதிகளுக்கான முதலீட்டை மத்திய அரசு படிப்படியாக அதிகரித்து, சிங்காய்-திபெத் ரயில் பாதை உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டதால், திபெத்தில் முதலீட்டுச் சூழல் பெரிதும் மேம்பட்டுள்ளது.