கிளீட்டஸ்......2005ம் ஆண்டு ஏப்ரல் திங்களில் சீன தலைமை அமைச்சர் வென் சியாபாவு இந்தியாவில் பயணம் செய்த போது இருநாடுகளும் சமாதானத்தையும் செழுமையையும் எதிர்நோக்கும் நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவை நிறுவுவதென அறிவித்தன. 2006ம் ஆண்டு "சீன-இந்திய நட்புறவு ஆண்டு"என இரு நாட்டு தலைமை அமைச்சர்களும் கூட்டாக தீர்மானித்துள்ளனர்.
கலை......அண்மையில் பீக்கிங் பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற "இந்திய விழா"என்னும் நடவடிக்கை பத்து நாட்கள் நீடித்தது. சொற்பொழிவு, கண்காட்சி, கலைநிகழ்ச்சிகள் ஆகிய வடிவங்களில் இந்திய இசை, இந்திய நடனம், இந்திய பொருளாதாரமும் சீன-இந்திய வர்த்தகமும், சீன-இந்திய உறவு மற்றும் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கை முதிலயவை பற்றி கருத்தரங்குகள் நடைபெற்றன. மக்களின் கவனத்தை மிகவும் ஈர்க்கும் நடவடிக்கையாக அவை அழைக்கப்படுகின்றன. சீன மக்கள் மிகவும் விரும்பிய இந்திய திரைப்படங்கள் இந்நிகழ்ச்சியின் போது திரையிடப்பட்டன. கிளீட்டஸ்......"இந்திய விழா"நடைபெற்ற போது எதாவது நிழற்படங்கள் காண்பிக்கப்பட்டதா?
கலை......இந்தியாவின் தந்தை காந்தியடிகளின் நிழற்படமும், நூற்றுக்கும் அதிகமான வேறு நிழற்படங்களும் துவக்க விழாவில் கண்காட்சியாக வைக்கப்பட்டன. அருமையான இந்திய காட்சிகள் மற்றும் செழுமையான பழக்கவழக்கங்கள் மாணவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. மாணவி சை யூ லின் இது பற்றி கூறியதாவது இந்திய விழா போன்ற நடவடிக்கை மேற்கொள்வது மிக சிறப்பானது. அதன் அம்சங்கள் மிக செழுமையானவை. இதன் மூலம் இந்தியா பற்றி கூடுதலாக அறிந்து கொள்ள முடியும். சீனாவும் இந்தியாவும் அண்டை நாடுகளாவும் வளரும் நாடுகளாகவும் திகழ்கின்றன. இத்தகைய பண்பாட்டு பரிமாற்ற நடவடிக்கைகள் அதிகமாக நடத்த வேண்டும் என்றார் அவர்.
கிளீட்டஸ்.....கடந்த சில ஆண்டுகளில் சீனாவில் இந்தியாவின் வெண்கல கண்காட்சி, இந்திய நடனம், இந்திய திரைப்பட விழா போன்ற நட்பார்ந்த பண்பாட்டு பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று நான் கேள்விபட்டேன். அப்படியா?
கலை.....ஆமாம். சீனாவுத்தும் இந்தியாவுத்துமிடையிலான பொருளாதார வர்த்தக உறவு மட்டுமல்ல பண்பாட்டு பரிமாற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து வளர்ச்சியடைந்துள்ளன
கிளீட்டஸ்......சீனாவில் தமிழ் சங்கங்கள் உண்டா? தமிழ் மொழி எவ்வாறு வளர்ந்தது? தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றதா?சீன சின்னதிரையில் தமிழ் தொடர் ஒலிபரப்பு உண்டா?என்று சென்னை எஸ் ரேணுகாதேவி கேட்டுள்ளார். கலை......சீனாவில் தமிழ் சங்கங்கள் முறைப் படி நிறுவபட்பட்டுள்ளதா என்றால் இல்லை. பெய்சிங்கில் வாழ்கின்ற தமிழர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். அவர்கள் தனித்தனியாக வேறுபட்ட தொழில் நிறுவனங்களில் வேலைபார்கின்றார்கள். அவர்கள் பெய்சிங்கில் தமிழ்ச்சங்கத்தை உருவாக்க வில்லை. ஆனால் கொண்டாட்ட நாட்களில் அவர்கள் ஒன்று கூடி மதிழ்ச்சியாக கொண்டாடும் வழக்கம் உண்டு. தமிழ் ஒலிபரப்பின் 43ம் ஆண்டு நிறைவு நாளை கொண்டாடும் வகையில் நமது நிபுணர் ராஜாராம் அவர்களின் ஏற்பாட்டில் பெய்சிங் வாழ் தமிழர்கள் கொண்டாட்ட கூட்டம் நடத்தினார்கள். ரேணுகா தேவி நீங்கள் எங்கள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து கேட்டால் கண்டிப்பாக கடந்த ஆகஸ்ட் திங்கள் 1ம் நாளில் சிறப்பு நிகழ்ச்சியின் மூலம் இதை கேட்டறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
கிளீட்டஸ்......தமிழ் மொழி கொண்ட சிறப்பு பள்ளி கூடம் சீனாவில் நிறுவப்பட வில்லை. இப்போது 13 மாணவர்கள் வானொலி கல்லூரியில் தமிழ் மொழி கற்றுக் கொள்கின்றார்கள். இந்திய திரைப்படங்கள் சீன திரையரங்கில் திரையிடப்படுகின்றன. இவ்வாண்டின் துவக்கத்தில் இந்தி மொழியில் திரையிடப்படும் "சூழ்ச்சியும் திருமணமும்" என்ற தொடர் ஒலிபரப்பப்பட்டது.
கலை.....இந்த தொடர் ஒலிபரப்பை நான் கூட அவ்வப்போது கண்டு ரசித்தேன். சீன இந்திய பண்பாட்டு பரிமாற்ற வளர்ச்சியுடன் இரு நாட்டு சுற்றுலா பண்பாடு பற்றிய தகவல் அததிகரித்துள்ளன. வெகுவிரைவில் இரு நாட்டு மக்களுக்கிடையிலான சுற்றுலா பயணம் அதிகமாக மேற்கொள்ளப்படும் என்று நம்புகின்றேன்.
கிளீட்டஸ்.....இன்றைய கேள்வியும் பதிலும் நிகழ்ச்சியில் சென்னை எஸ் ரேணுகாதேவி கேட்ட கேள்விகளுக்கு விடையளித்துள்ளோம். நேயர்களே தொடர்ந்து எங்களுக்கு உங்களுடைய வினாக்களை அனுப்புங்கள்.
|