சீன-இந்திய எல்லையில் அமைந்துள்ள நாதுலா கணவாய் வர்த்தக பாதை 44 ஆண்டுகளுக்கு பின் இன்று காலையில் மீண்டும் திறக்கப்பட்டது. இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் முதலமைச்சர் பவன் குமார் சாம்ளிங் திறப்பு விழாவுக்கு தலைமை தாங்கினார். சீனத் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் Qiangba Puncog, இந்தியாவில் உள்ள சீனத் தூதர் Sun Yu Xi ஆகியோரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். எல்லை வர்த்தகத்தை மீண்டும் நடத்துவது, இந்த வட்டாரத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமானது என்று சாம்ளிங் கூறினார். இது, வர்த்தக பாதை மட்டுமல்ல, பண்பாட்டு பாதையுமாகும். இந்திய-சீன உறவை மேலும் உயர் நிலைக்கு இது உயர்த்தும் என்றும் அவர் சொன்னார். எல்லை வர்த்தக நுழைவாயில் திறக்கப்படுவது, இரு நாட்டுறவை மேம்படுத்துவதற்கு துணை புரியும் என்று சீனத் தூதர் Sun Yu Xi தெரிவித்தார். சீன வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் Jiang Yu அம்மையார் இன்று பெய்ஜிங்கில் பேசுகையில், நாதுலா கணவாய் வர்த்தக பாதை திறக்கப்படுவதால், இரு நாட்டு உறவும், பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பும் மேலும் மேலும் மேம்படுத்தும் என்றார். தற்போது சீனா, இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகும். இந்தியா, சீனாவின் 11வது பெரிய வர்த்தக கூட்டாளியாகத் திகழ்கிறது. கடந்த ஆண்டு, இரு நாட்டு வர்த்தகம், 1870 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இவ்வாண்டு 2000 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
|