• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-13 20:49:00    
பெருஞ்சுவரின் பிறப்பிடத்தில் நடைபெறும் கொண்டாட்ட விழா

cri

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்க வருகை தருவோரில் பெரும்பாலோர் குழுவாக வராததால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்த விண்ணப்பித்த போது பெய்ச்சிங் அளித்த வாக்குறுதிக்கிணங்க, நட்சத்திர ஹோட்டல்களின் எண்ணிக்கை 800ஆக அதிகரிக்கப்படுவதோடு, இளைஞர் சுற்றுலா பணியகங்களும் குடும்ப விடுதிகளும் அதிகரிக்கப்படும்.

பயணிகளின் சுற்றுலாச் செலவைக் குறைப்பதே அதன் நோக்கம் ஆகும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடைபெறும் காலத்தில், பெய்ச்சிங் மாநகரச் சுற்றுலா நிறுவனங்கள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மைதானம் அரங்கம், பாரம்பரிய காட்சித் தலங்கள் உள்ளிட்ட ஒலிம்பிக் சுற்றுலா நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கின்றன.

அனைவருக்கும் தெரிந்த புதிய சியுசுவெய் வீதி, பென்சியாயுவான் பழைய பொருள் விற்பனைச் சந்தை முதலியவை இவற்றில் இடம்பெறுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் பழைய பெய்ச்சிங்கின் பேரரசர் குடும்பப் பண்பாட்டை உணரும் அதே வேளையில், புதிய பெய்ச்சிங் நகரவாசிகளின் பண்பாட்டையும் கண்டு உணரலாம் என்பதே இதன் நோக்கம்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, பயணிகள் பலர் குழுவாக வராதபடியால், பெய்ச்சிங் போக்குவரத்துப் பிரிவுகள், நகரைச் சுற்றிப் பார்வையிடுவதற்குத் துணை புரியும் இரட்டை அடுக்கு பேருந்துகளை உட்புகுத்தவுள்ளன.

மேலே கூரை இல்லாத, இருக்கைகள் மட்டுமே கொண்ட இத்தகைய பேருந்துகளில் செல்லும் பயணிகள் பெய்ச்சிங்கைத் தெளிவாகப் பார்வையிடலாம். பேருந்துகளின் நிறுத்த இடங்கள், பயணிகள் வசிக்கும் ஹோட்டல்கள், பெய்ச்சிங் நகரப் பகுதியிலுள்ள முக்கிய காட்சித் தலங்கள், பொருள் விற்பனை மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் அமையும்.

பேருந்தில் தானியங்கி வழிகாட்டு வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் earphone அணிந்தால், மொழிகளைத் தேர்ந்தெடுத்து, சுற்றுலா பற்றிய அறிமுகத்தைக் கேட்டறியலாம்.

வாகனச் சீட்டு விலை சுமார் 200 யுவான். வாகனச் சீட்டு வாங்கிய பயணிகள் 2 நாட்களுக்குள், எத்தனை முறைகள் வேண்டுமென்றாலும் பெய்ச்சிங்கைச் சுற்றிப் பார்க்கலாம்.

பெய்ச்சிங் மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள இடங்களைப் பார்வையிடுவதைத் தவிர, விளையாட்டுப் போட்டியின் இடைவெளியில், பயணிகள் சீனாவின் இதர இடங்களுக்குச் சென்று பார்வையிடலாம். தற்போது, சில சுற்றுலா நிறுவனங்கள் இதனுடன் தொடர்புடைய ஆயத்தப் பணியை மேற்கொண்டுவருகின்றன.

சீனாவின் மிகப் பெரிய சுற்றுலா நிறுவனமான சீன சர்வதேச சுற்றுலா நிறுவனத்தைச் சேர்ந்த ஒலிம்பிக விளையாட்டுப் போட்டிப் பொருள் அலுவலகத்தின் மேலாளர் சாவ்சின் கூறியதாவது, 

இவ்வாண்டு பேருந்தில் சுற்றுலா என்னும் நிகழ்ச்சியை ஏற்பாடுசெய்கிறோம். இது அமெரிக்காவின் Greyhound போன்றது. தனியாக வருகை தரும் பயணிகள் எந்நேரத்திலும் சீட்டு வாங்கலாம். அல்லது இணைய தளத்தில் பதிவு செய்யலாம். கட்டணம் செலுத்திய பின்னர், எங்கள் சுற்றுலாவில் கலந்துகொள்ளலாம்.

வெளிநாட்டுப் பயணிகளுக்குச் சேவை புரிவதால், அந்நிய மொழியில் விளக்கிக்கூறப்படும் என்றார். மொழி பிரச்சினை என்பது சீனாவில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் கவலைப்படும் விடயமாகும்.

இப்பிரச்சினை 2008ஆம் ஆண்டில் முற்றிலும் தீர்க்கப்படும். தற்போது பெய்ச்சிங்கில் அனைத்து பெயர் பலகைகளும் புணரமைக்கப்படும். ஆங்கில மொழி பெயர் பலகைகள் அதிகரிக்கப்படும். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, சுற்றுலாத் தகவல் மையங்கள் அதிகரிக்கப்படும்.

பயணிகள் குழுமியிருக்கும் பொது இடங்களில், திரையில் தொட்டால் தகவல் அறியும் கருவிகள் பொருத்தப்பட்டு, சுற்றுலாத் தகவல் மற்றும் வழிகாட்டுச் சேவை வழங்கப்படும்.

அன்றி, பெய்ச்சிங்கில், ஆங்கில மொழியில் பேசும் பணியாளர்கள் பொது இடங்களில் எந்நேரத்திலும் பயணிகளுக்குச் சேவை புரிவார்கள்.

அடுத்த ஆண்டு பெய்ச்சிங் ஒலிம்பிக் பூங்காவின் கட்டுமானப் பணி நிறைவடையும் போது, ஒலிம்பிக் மரங்களை வளர்க்கும் இயக்கம் நடைபெறும். ஒவ்வொரு பயணியும் இந்தப் பூங்காவின் சுற்றுப் புறத்தில் நினைவுக் கூரும் முக்கியத்துவம் வாய்ந்த மரம் ஒன்றை நடலாம். 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான துவக்க இசை பெய்ச்சிங்கில் எதிரொலிக்கின்றது.

2008ஆம் ஆண்டில் உலகின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த மக்கள் பெய்ச்சிங்கில் குழுமியிருக்கும் போது, பெய்ச்சிங் மாநகரம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்கும் என நம்புகின்றோம்.