• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-20 14:31:03    
100 ஆண்டு வரலாறுடைய பெய்ச்சிங் சிற்றுண்டி

cri

பெய்ச்சிங்கிலுள்ள குறுகிய வீதி-ஹுதொங்கில் சுற்றுலா மேற்கொள்ளலாம். பகலில் பெய்ச்சிங்கிலுள்ள சில பிரபல காட்சித்தலங்களுக்குச் சென்று பார்வையிடலாம்.

மதிய வேளையிலும் இரவிலும் பெய்ச்சிங் சிற்றுண்டியை உண்ணலாம். பெய்ச்சிங் ஒபெராவைக் கண்டுகளிக்கலாம். இரவில் வீதிகளில் பொது மக்களுடன் இணைந்து யியாங்க என்னும் நடனம் ஆடலாம்.

நேயர்களாகிய நீங்கள் 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளைக் கண்டுகளிக்க பெய்ச்சிங் வந்தால், பெய்ச்சிங் வாத்து உண்பது உறுதி.

ஆனால், பழங்கால பெய்ச்சிங் உணவை உண்ண விரும்பினால் பாரம்பரிய தனிச்சிறப்புடைய சிற்றுண்டியை உண்ணத் தவறாதீர்கள்.

இப்போது பெய்ச்சிங்கின் பாரம்பரிய பாலடைக்கட்டி பற்றி அறிமுகப்படுத்துகிறேன். வெளிநாடுகளின் பாலடைக்கட்டியுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, பெய்ச்சிங்கில் தயாரிக்கப்படும் பாலடைக்கட்டி, மேலும் தயிரைப் போல உள்ளது.

அரை திரவத்துடன் கூடிய இந்தப் பாலடைக்கட்டி வெண்ணிறமுடையது, வழுவழுப்பானது, இனிப்பானது, நறு மணம் வீசுகிறது.

கடந்த காலத்தில் பாலடைக்கட்டி, அரண்மனையிலுள்ள உணவுப் பொருளாக இருந்தது என்று பெய்ச்சிங் மாநகரில் 100 ஆண்டு வரலாறுடைய பிரபல பாலடைக்கட்டி கடையின் உரிமையாளர் வெய்குவாங்லொ கூறினார்.

இவ்வாண்டு 73 வயதாகும் இவர், இந்தப் பிரபல பாலடைக்கட்டி தயாரிப்புக் கடையின் 3வது தலைமுறையினர் ஆவார். அவர் மேலும் கூறியதாவது, எனது தாத்தா, பேரரசரின் சமையற்காரர் ஒருவருடன் பழகினார்.

அப்போது, நாங்கள் ஏழை. குடும்பத்தில் வறுமை. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரின் வாழ்க்கைக்கும், பாலடைக்கட்டி தயாரிப்பு நுட்பத்தைச் சொல்லிக்கொடுக்கின்றேன் என்று இந்த சமையற்காரர் என்னுடைய தாத்தாவிடம் கூறினார் என்றார்.

பாலடைக்கட்டியின் செய்முறை பற்றி வெய்குவாங்லொ அறிமுகப்படுத்தினார். புத்தம் புதிய மாட்டுப்பாலை முக்கிய மூலப்பொருளாகக் கொண்டு, இதில் கொஞ்சம் அரிசி மதுவை ஊற்றிவிட்டு, ஒரு மணி நேரம் அடுப்பில் காய்ச்சி, இறுதியில் குளிர்ப் பதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.

இதை உண்ணும் போது, பால் மணமும் லேசான மது மணமும் இணைந்து வீசும். சுவையும் அதிகம் என்பது இத்தகைய பாலடைக்கட்டியின் தனிச்சிறப்பாகும்.

இதைத் தயாரிக்கும் போது, உலர்ந்த திராட்சை உள்ளிட்ட உலர்ந்த பழவகையை இதில் சேர்த்தால் மேலும் சுவையாக இருக்கும் என்றார் அவர்.

கடந்த பல ஆண்டுகளாக, வெய் குடும்பம் தயாரிக்கும் பாலடைக்கட்டி பெய்ச்சிங் மாநகரில் புகழ்பெற்று வரவேற்கப்பட்டுவருகின்றது. இதை உண்ண வருவோரில் பெரும்பாலோர் பிரபல எழுத்தாளர்களும் பேரரசர் குடும்பத்தினரின் தலைமுறையினரும் ஆவர்.

சீனாவின் கடைசியான பேரரசர் வுயியும் அவருடைய தம்பி வுஜெயும் இவர்களில் இடம்பெற்றுள்ளனர். வுஜெ தமது வாழ்வின் இறுதி நேரத்திலும் கூட, பாலடைக்கட்டியை வாங்குமாறு ஒருவரை அனுப்பினார்.

மேற்கூறிய பாலடைக்கட்டியைச் சாப்பிட்டுவிட்டு நாடு திரும்பிய ஜெர்மன் நண்பர் ஒருவர் வெய்குவாங்லொவுக்குக் கடிதம் அனுப்பினார். ஒரு கிண்ணப் பாலடைக்கட்டியின் விலை 4 யுவான்.

தனிச்சிறப்பு வாய்ந்த பால் பொருட்களை வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். பெய்ச்சிங் மாநகரின் வாங்வுசிங், சியெமன் முதலிய வணிக வீதிகளில் பழங்கால பெய்ச்சிங் சிற்றுண்டி விற்கப்படுகின்றது. விலை அதிகமில்லை.

வாய்ப்பைக் கிடைத்தால் வருகை தந்து சாப்பிடலாம். இத்தகைய பாலடைக்கட்டிக்கும் இந்தியாவின் தயிருக்கும் பெரும் வித்தியாசம் உண்டா?நீங்கள் பாலடைக்கட்டியைச் சுவைத்துப் பார்க்க விரும்புகிறீர்களா?இதற்கு முன்னர் சீனாவின் பாலடைக்கட்டி பற்றி கேட்டறிந்தீர்களா?தமிழ் நாட்டில் பாலடைக்கட்டி போன்ற உணவு உண்டா?சுவையானதா?

இனி சுற்றுலா பற்றிய தகவலை வழங்குகின்றோம். விளையாட்டு விரும்புவோர், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சூழ்நிலையை முதலில் உணரத் துணை புரியும் வகையில், பெய்ச்சிங் மாநகரச் சுற்றுலாப் பணியகம், பயிற்சிச் சுற்றுலா என்னும் புதிய வகை ஒலிம்பிக் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

விளையாட்டுப் பிரியர்களின் விருப்பத்தை நிறைவு செய்ய, அவர்கள் அல்லது ஓய்வு நேர விளையாட்டு வீரர்கள், சீனாவில் பயணம் மேற்கொள்ளும் போது, சீன விளையாட்டு வீரர்களின் பயற்சி பாதிக்கப்படாமல் இருக்கும் நிலைமையில், gymnsastics, மேசைப்பந்தாட்டம், பாட்மின்டன் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் உலகச் சாம்பியன் பட்டம் பெற்ற வீரர்களுடன் நெருங்கிச் சென்று அவர்களுடன் இணைந்து பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்.

இதற்குத் தேவைப்படும் கட்டணம் 10 நாட்களுக்குப் பத்தாயிரம் ரன்மின்பி யுவான்.