
சீனாவும் இந்தியாவும் நாதுலா கணவாய் எல்லை வர்த்தகப் பாதையை மீண்டும் திறந்து விட்டதை இந்திய செய்தி ஊடகங்கள் இன்று வெகுவாக பாராட்டியுள்ளன. இரு நாட்டு மக்களிடையே புரிந்துணர்வையும் தொடர்பையும் அதிகரிப்பதற்கும், சீன-இந்திய உறவை மேம்படுத்துவதற்கும் இது துணை புரியும் என அவை கருதுகின்றன. இந்த வர்த்தக பாதை திறந்து விடப்பட்டிருப்பதால், பொருளாதாரம் வளமடைந்து, இரு நாட்டு மக்களிடையே புரிந்துணர்வு ஆழமாகி, ஒத்துழைப்பு விரிவாகும் என்று தி இந்து என்னும் செய்தி ஏடு தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. நாதுலா வர்த்தகப்பாதை, தெற்காசியாவுக்கு சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், புதிய கட்டத்தின் துவக்கத்தை இது கோடிட்டுக்காட்டுகின்றது என்றும் Times of India என்னும் நாளேட்டின் கட்டுரை கூறுகின்றது.
|