• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-11 10:04:05    
முதலிடத்திற்கு வைக்கப்பட்ட கண்ணொளி முயற்சி

cri

கலை ......"கண்ணொளி முதலிடம்" என்னும் திட்டத்தில் சீனா பெற்றுள்ள வெற்றி பற்றி உலக சுகாதார அமைப்பின் ஆலோசகர் பாலாலா உயர்வாக பாராட்டினார்.

கிளீட்டஸ்....... "கண்ணொளி முதலிடம்" என்னும் நடவடிக்கை சீனாவில் நடைமுறைக்கு வந்த பின் கண்நோய் துறை மருத்துவ ஊழியர்களுக்கு மிக சிறந்த முறையில் சிகிச்சை சூழ்நிலை ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் சிகிச்சை தரம் பெரிதும் உயர்ந்துள்ளது. அவர்கள் இப்போது கொண்டுள்ள மருத்துவ சிகிச்சை வசதி உலகின் மற்ற நாடுகளின் மருத்துவர்கள் பெற்றுள்ள நிலையுடன் ஒப்பிடக் கூடியது என்றார்.

கலை....ஆலோசகர் பாலாலா நன்றாக சீன மருத்துவரை பாராட்டினார். "கண்ணொளி முதலிடம்" என்னும் திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். சாதாரண நோயாளிகளிடையே கள ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சோதனை பணிக்கு சீனாவில் பல்வேறு நிலை ஊனமுற்றோர் சம்மேளங்களிடமிருந்தும் உள்ளூர் அரசாங்கங்களிடமிருந்தும் உதவி பெற வேண்டும்.

கிளீட்டஸ்......கலை நீங்கள் இப்போது குறிப்பிட்ட சாதாரண நோயாளிகள் ஊனமுற்றோர் என குறிப்பிட்டீர்களா?

கலை.......ஆமாம். ஊனமுறோர்களில் பெரும்பாலோர் எட்டாத தொலை தூர கிராமங்களில் வாழ்கின்றனர். கண்புறை நோய்வாய்ப்ட்டவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை மருத்துவ மனைக்கு அனுப்ப வேண்டும்.

கிளீட்டஸ்....... இந்த பணியை நிறைவேற்ற மேண்டுமானால் நிறைய நுணுக்கமான வேலைகள் செய்ய வேண்டும் அப்படிதானே.

கலை.....ஆமாம். சீன ஊனமுற்றோர் சம்மேளனத்தின் துணை இயக்குனர் தான் சியௌ சியென் அம்மையார் இந்த முயற்சி பற்றி கூறினார்

நாம் உள்ளூர் அரசாங்கத்துடனும், அங்குள்ள ஊனமுற்றோர் சம்மேளனத்துடனும் இணைந்து கிராமம் கிராமாகச் சென்று "கண்ணொளி முதலிடம்" என்னும் திட்டம் பற்றி பிரசாரம் செய்கின்றோம். நோயாளிகள் துவக்கத்தில் சிகிச்சை மூலம் மீண்டும் உலகத்தை பார்க்க முடியும் என்பதை நம்பமாட்டார்கள். பணம் கட்டுவது அவர்களுக்கு கவலை அதிகம். கடைசியில் அறுவை சிகிச்சை பெற்று கண்பார்வை மீண்டும் மீட்கப்பட்ட பின் அவர்களின் வாழ்க்கை சூழ்நிலை முழுமையாக மாறிவிட்டது என்றார்.

கிஸீட்டஸ்....... "கண்ணொளி முதலிடம்" என்னும் திட்டம் சீனாவின் பல்வேறு நிலை அரசாங்கங்களின் ஆதரவு பெற்றுள்ளது. பல்வேறு நிலை அரசாங்கங்கள் எப்படி உதவி செய்கின்றன?

கலை......பல்வேறு நிலை உள்ளூர் அரசாங்கங்களின் நிதித் துறை செழுமையாக வில்லை. இருந்தாலும், சர்வதேச அரிமா சங்கம் நன்கொடை செய்த நிதியை விட பத்து மடங்கு அளவில் அவை நிதி ஒதுக்கிட்டு இந்த "கண்ணொளி முதலிடம்" என்னும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளன. அதேவேளையில் பல்வேறு மாநில அரசாங்கங்களும் இந்த முயற்சியை வாய்பாக பயன்படுத்தி உள்ளூர் மக்களின் கண்பார்வையற்ற பற்றாக்குறையை சீர்செய்துள்ளன.