ராஜா.... காளானை இப்படி நறுக்கிய பின் கேரட்,வெள்ளரிக் காய் ஆகியவற்றை நேரடியாக சிறுசிறு நீளத் துண்டுகளாக நறுக்கலாம்.
கலை.....பிறகு தக்காளியின் தோளை உரித்து வில்லை வில்லையாக நறுக்க வேண்டும். இஞ்சியின் தோல் உரித்து அப்புறம் பூ வடிவத்தில் நறுக்கக் கொள்ளுங்கள்.
ராஜா......பச்சை நிற காலி பிளவரை சிறுசிறு பூக்களாக போல் பிரிக்க வேண்டும்.
கலை......மக்காச் சோளத்தை 3 சென்ட்டி மீட்டர் நீள வடிவத்தில் இதை வெட்ட வேண்டும்.
ராஜா..... காய்களை பல்வேறு வடிவங்களில் நறுக்கிய பின் என்ன செய்ய வேண்டும்?
கலை........பொறுமையுடன் கேளுங்கள். வாணலயில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் தீயின் மேல் வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொத்தித்த பின் தயாராக உள்ள காய்கள் அனைத்தையும் கொத்தித்த தண்ணீரில் போடுங்கள் 2 நிமிடங்கள் நன்றாக கொதித்த பின் தட்டில் காய்களை வெளியே எடுத்து தட்டில் போடுங்கள்.
ராஜா......வாணலலில் கொஞ்சம் உணவு எண்ணெய் ஊற்றுங்கள்.
கலை.....அப்புறம் வேகவைத்த காய்களை எண்ணெயில் போடுங்கள் கொஞ்சம் உப்பு, மசாலா பொருட்கள் கொஞ்சம் சக்கரை ஆகியவற்றையும் போடவும்.
ராஜா.....இவற்றை லேசாக கிளறிவிட்டு பத்து நிமிடம் உதக்குங்கள். அதன் பிறகு உண்டு மகிழலாம்.
கலை....இந்த காய்கறி உணவின் தனிச்சிறப்பு என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
ராஜா.....எனக்கு தெரியும். இந்த காய்கறி உணவு சைவ பிரியவர்களுக்கு மிகவும் விருப்பமானது. மேலும் முதல் தடவையாக முட்டை சேர்க்காத சீன உணவு.
கலை.....நன்றாக பேசினீர்கள். வாய் மூலம் பேசுவது மட்டும் போதாது. சமைத்துப் பார்த்து சுவை எப்படி என்று நண்பர்களிடம் தெரிவித்தால் நல்லது.
ராஜா.....சரி சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நேரம் ஆகிவிட்டது.
|