கடந்த ஜூலை முதல் நாள், உலகளவில் மிகவும் உயரமான ரயில் பாதையான சிங்ஹேய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்து திறந்துவிடப்பட்டது. சிங்ஹேய்-திபெத் பீடபூமியை கடந்த இந்த ரயில் பாதை, திபெத் மக்களுக்கு போக்குவரத்து வசதியை வழங்கியதோடு, திபெத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மாபெரும் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. திபெத் மக்களைப் பொறுத்தவரை, இந்த ரயில் பாதை, பீடபூமியிலுள்ள தங்க பாதை ஆகும்.
தோ ச்சே வாங் சா என்பவர், திபெத் வடபகுதியின் நா ச்சூயில் வாழ்ந்த கால்நடை மேய்ப்பர் ஆவார். சிங்ஹேய்-திபெத் ரயில் பாதையின் கட்டுமானத்தினால், அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை மாற்றம் ஏற்பட்டது. அவருடைய குடும்பத்தில் ஏழு பேர் உள்ளனர். அவர்கள் சுமார் 40 மாடுகளையும் நூற்றுக்கு அதிகமான ஆடுகளையும் வளர்த்து வந்தனர். தொழிலாளர்கள் ரயில் பாதையைக் கட்ட இங்கே வந்த பிறகு, தோ ச்சே வாங் சா, அருகில் ஒரு கூடாரத்தை அமைத்து, தொழிலாளர்களுக்கு, சிகரெட், மது, உணவுகள் முதலியவற்றை விற்பனை செய்தார். அத்துடன் அவர் குடும்பத்தினர் அனைவரும், ரயில் பாதை பாதுகாப்பு குழுவில் சேர்ந்து, வருமானம் பெற்றனர். கடந்த ஆண்டில், அவர் குடும்பத்தின் வருமானம், முன்கண்டிராத 10 ஆயிரம் யுவானைத் தாண்டியுள்ளது.
சிங்ஹேய்-திபெத் ரயில் பாதை கட்டிமுடிக்கப்பட்டதால், தோ ச்சே வாங் சா, கால்நடை மேய்ப்பவராக இருந்து ஒரு வணிகராக மாறியுள்ளார். திபெத் தன்னாட்சி பிரதேசம், சீன நாட்டின் பரப்பளவின் எட்டில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. நீண்டகாலமாக, திபெத், சாலை மற்றும் விமான போக்குவரத்தை மட்டுமே. போக்குவரத்தின் அளவிலும் வசதியிலும் பார்த்தால், தன் வளர்ச்சியின் தேவை நிறைவு செய்யப்பட முடியவில்லை. பின்தங்கிய போக்குவரத்து நிலைமை, திபெத் வேகமாக வளர்ச்சியடைவதற்கு தடையாக நின்ற முக்கிய காரணமாகும்.
சிங்ஹேய்-திபெத் ரயில் பாதை கட்டிமுடிக்கப்பட்டது, இந்நிலைமையை மாற்றி, எதிர்காலத்தில் திபெத்தின் தொடரவல்ல வளர்ச்சிக்கு நம்பகமான உத்தரவாதத்தை வழங்கும். திபெத்துக்கும் வேறு இடங்களுக்கும் இடையே பொருளாதார பரிமாற்றத்தை மேம்படுத்துவது, திபெத்திற்கு ஏற்றுமதி இறக்குமதி சரக்குகளின் ஏற்றியிறக்கல் செலவைக் குறைப்பது, திபெத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சியை முன்னேற்றுவது, திபெத்தின் கணிமன் மூலவளத்தின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டை விரைவுப்படுத்துவது ஆகியவற்றில், இந்த ரயில் பாதை ஆக்கப்பூர்வமான செல்வாக்கை ஏற்படுத்தும்.
சுற்றுலா துறையில், சிங்ஹேய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்து, மக்கள் திபெத்துக்கு சென்று வருவதற்கு மேலும் வசதியான வழியை வழங்கியது. இது குறித்து, எமது செய்தியாளருக்குப் பேட்டி அளித்த காங் சூங் லுய் என்னும் சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் தலைமையகத்தின் துணை மேலாளர் லியங் யுவான் அம்மையார் கூறியதாவது:
தொடர்வண்டி மூலம், திபெத்தில் சுற்றுலா பயணம் மேற்கொள்வதில் மூன்று சிறப்பு பயன்கள் உள்ளன. முதலாவது, செலவு விலைவில், விமானத்தை விட, பயணச்செலவு ஒவ்வொருவருக்கும் சுமார் 2000 யுவான் குறையும். இரண்டாவது, பீடபூமியின் காலநிலைக்கு படிப்படியாக ஏற்றதாக இருக்கும். மூன்றாவது, செல்லும் வழியில் அழகான கண்கவர் காட்சிகளைப் பார்க்கலாம் என்றார்.
உண்மையில், சிங்ஹேய்-திபெத் ரயில் பாதையின் பீடபூமி தொடர் வண்டியில், சிங்ஹேய் ஏரி, கொகொசிலி, யாங்சி ஆற்றின் ஊற்று மூலம், தாங்குரா மலை நுழைவாயில், வட திபெத்திலுள்ள ச்சியாங் தாங் புல்வெளி உள்ளிட்ட இயற்கை காட்சிகளைப் பார்ப்பது மட்டுமல்லாது, திபெத் இனத்தின் பண்பாட்டையும் பயணிகள் உணரலாம். இது குறித்து, திபெத் சுற்றுலா ஆணையகத்தின் துணை இயக்குநர் ச்சானோ பேசுகையில், இந்த ரயில் பாதை, திபெத் சுற்றுலா துறைக்கு வளர்ச்சி வாய்ப்பை கொண்டு வருகிறது. ஜூலை முதல் நாள் முதல், திபெத்தில் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்தார். பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதினால், திபெத் சுற்றுலா துறை மற்றும் தொடர்புடைய துறைகள், மேலும் அதிகமான வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறவுள்ளன.
|