• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-10 18:59:57    
விநோதமான எதிர்கால நகரங்கள்

cri

எதிர்காலவியல் நிபுணர்கள் எதிர்கால நகரங்களின் வளர்ச்சி பற்றி கம்பீரமான உருவரைவு திட்டத்தை தீட்டுகிறார்கள். அவை பின் வருமாறு:

கூட்டமைப்பு நகரங்கள்

ஒரு பகுதி நகரங்களில் புவியியல் சுற்றுச்சூழல் மற்றும் உற்பத்தி தேவைக்கிணங்க மக்கள் தொகை கட்டற்றமுறையில் அதிகரிக்கும். அது பிரமாண்டமான விழுங்கு சேல் போல் சுற்றுப்புறங்களை இடைவிடாமல் விழுங்கும். இதனால், பல்வேறு நகரங்கள் ஒன்றிணைக்கப்படும். பிரமாண்டமான நகர கூட்டம் ஒன்று உருவாகும். அது கூட்டமைப்பு நகரம் என்று அழைக்கப்படுகிறது.

மலை நகரம்

நில வளத்தை முற்று முழுதாக பயன்படுத்தும் வகையில், மலையடிவாரத்திலுள்ள நகரங்கள் மலையின் மேல் பகுதியை வளர்ச்சியுற செய்ய வேண்டி ஏற்படும். மலையின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்றிணைக்கப்படும். பெரிய LIFT அது போக்குவரத்து வசதியாக அமையும்.

கடலடி நகர்

கடலடி மூலவளங்களின் பயன்பாட்டுடன், மாக்கடலின் கடலடி, பதனீட்டு தளமாக மாறிவிடும். அறிவியலாளர்கள் பயனுள்ள செயற்கை சுவாசப்பைகளை கடலடி கட்டிடங்களின் சன்னல்களாக உருவாக்க ஆராய்ச்சி செய்து தயாரித்து வருகிறார்கள். காரணம், கடலடி வளங்கள், செழுமையானவை. ஆகையால் கடலடி நகரங்கள் ஏராளமாக தோன்றி விடும்.

பாலைவன நகர்

விசாலமான பாலைவனத்தின் அடித்தளத்தில் வளமிக்க எண்ணெய் வளம் மறைந்து கிடக்கிறது. ஆகவே, பாலைவனங்களைப் பயன்படுத்துவது, எப்பொழுதோ மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எரி ஆற்றல் பயன்பாடு பசுமையமாக்கப் பணி ஆகியவை தொடர்ந்து முன்னேறுவதுடன் பாலைவனங்களில் எழில் மிக்க நகரங்கள் கட்டியமைக்கப்படும்.

சிதறிக்கிடக்கும் நகரங்கள்

தொழில் துறையின் இடைவிடா வளர்ச்சியுடன் நகரங்களில் உழைப்பு ஆற்றல் பற்றாக்குறையாக இருக்கும். இதனால், மலைப்பிரதேசங்களில் வாழும் மக்கள் பலர் நகரங்களுக்குச் சென்று வேலை செய்வார்கள். ஆனாலும் மக்கள் தொகை நெருக்கமாக உள்ள நகரங்களில் வாழ்க்கை சூழல் ஊரக மலைப்பிரதேசங்களை விட மோசமாவதை மக்கள் கண்டறிந்தனர். அதுவும் போக்குவரத்து வசதிகள் மற்றும் செய்தி தொடர்பு தொழில் வளர்ச்சியினால், நகரவாசிகள் மலைப்பிரதேசங்களில் வாழ விரும்புவார்கள். வேலை பகுதிகள், சிதறி வாழும் குடியிருப்பு பிரதேசத்திலிருந்து பிரிக்கப்படும் நகரங்கள் தோன்றிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிக உயரமான கட்டிடங்கள் கொண்ட நகரங்கள்

எதிர்காலத்தில் நிலப்பயன்பாட்டு விகிதம் அதிகரிப்பதுடன் மிக உயரமான கட்டிடங்கள் ஒன்றன் பின் ஒன்றாக கட்டப்படும். அவை பல்லாயிரம் மீட்டர் உயரம் உடையவையாக இருக்கும்.