• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-10 19:29:26    
சனி கிரகத்தின் துணைக்கோள் என்ஸலாடஸ்

cri

பொதுவாக சென்னை மாநகரிலிருந்து புறநகருக்கு ரயிலிலோ பேருந்திலோ சென்றால் வீடு மனை விற்பனை பற்றிய விளம்பர நோட்டிசுகள் உங்கள் கைகளில் திணிக்கப்படலாம் அல்லது எங்காவது ஒட்டப்பட்டிருக்கலாம். ரயிலடிக்கு அருகே பேருந்து நிலையத்திற்கு அன்மையில் சுவயான நீர், சாலை வசதி, மின்சார இணைப்பு என அனைத்து வசதிகளும் கொண்ட மனைகள், வார இறுதி நாட்களில் மனைகளை பார்வையிட இலவச பயணம், ரொக்கமாக அல்லது தவணை முறையில் பணம் செலுத்தலாம், பதிவு இலவசம் என்றெல்லாம் ரியல் எஸ்டேட், வீட்டு மனை விற்பனை விளம்பரங்கள் இருப்பது நாம் அறிவோம். மனித இனம் தனது அறிவாற்றலை இருக்கின்ற நிலத்தை கூறுபோட்டு புதிது புதிதாக குடியிருப்புகளையும் புறநகர் பகுதிகளையும் உருவாக்க மட்டுமே பயன்படுத்தவில்லை, உயிர்வாழ்க்கை பூமியில் மட்டும் தான் சாத்தியமா என்ற கேள்வியின் தொடர்ச்சியாக மார்ஸ் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகளை கண்டறிந்ததோடு சனி கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான என்ஸலாடஸிலும் உயிர்வாழ்க்கை சாத்தியங்களை கண்டறிந்துள்ளான். பூமியை கூறுபோட்டு நிலத்தையெல்லாம் விற்றபின் அடுத்த வீட்டு மனை திட்டம் செவ்வாய் கிரகத்திலா அல்லது சனியின் துணைக்கோளான என்ஸலாடஸிலா அல்லது இன்ன பிற விண்வெளியில் சுழன்று கொண்டிருக்கும் சூரிய குடும்பங்களில் ஏதோ ஒரு கிரகத்திலா என்பது தெரியவில்லை.

செவ்வாய் கிரக ஆய்வுகளைப் பற்றி சில தகவல்களை நாம் ஏற்கனவே அறிந்திருப்போம், இன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் சனி கிரகத்தின் துணைக்கோளான என்ஸலாடஸ் பற்றிய ஆய்வுகள் மற்றும் தகவல்களை அறியத் தருகிறோம். சனி கிரகத்தை சுற்றியுள்ள கடைசி வளையத்தில் மையமில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் கோள் என்ஸலாடஸ். பூமிக்கு நிலவு எப்படியோ அதுபோல் சனிக்குள்ள நிலவுகளில் ஒன்று இந்த என்ஸலாடஸ். அதுவும் நமது நிலவைப்போல் வெண்மையாக காணப்படும் இந்த என்ஸலாடஸ் ஆய்வாளர்களுக்கு புதிராகவே இருந்து வந்துள்ளது. 504 கிமீ குறுக்களவுள்ள இந்த என்ஸலாடஸ் கிரேக்க பழங்கதைகளில் ராட்சதனின் பெயராகும். பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும் இந்த என்ஸலாடஸ் பார்ப்பதற்கு கடினத்தன்மைக் கொண்டதாக இருந்தாலும் இந்த பனிப்படிவத்திற்கு கீழே வழுவழுப்பான சதுப்புத் தன்மை கொண்டதாக அன்மை ஆய்வுகள் கூறுகின்றன. சனியின் துணைக்கோள்களை ஆய்வு செய்யும் வகையில் அனுப்பப்பட்ட காஸ்ஸினி வின்கலத்தின் ஆய்வுகளின்படி இந்த என்ஸலாடஸின் மேற்பரப்பிலிருந்து நீராவி வெளியேறி அவை மேலே பனிக்கீற்றுகளாக கற்களாக பல நூறு கி மீ பரவியிருப்பதாக அறியப்படுகிறது. இதன் மூலம் டைடல் ஹீட்டிங் எனப்படும் கிரகங்களின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் உட்பகுதியிலான வெப்பமடைதலின் மூலம் என்ஸலாடஸில் கிரையோ வோல்கனோஸ் பனி எரிமலைகள் உருவாகின்றன என்று கிரகிக்கப்படுகிறது. விளக்கமாக சொல்லவேண்டுமென்றால் சனி கிரகத்தின் ஈர்ப்பு விசை மற்ரும் சனியின் மற்ற துணைக் கோள்களான டியோன் ஜானஸ் ஆகியவற்றின் ஈர்ப்புவிசை இந்த என்ஸலாடஸின் உடபகுதியை சுருக்கி விரிவாக்கி இதன் மூலம் உராய்வு ஏற்பட்டு அதனூடாக என்ஸலாடஸின் மேற்பரப்பின் கீழுள்ள பகுதி வெப்பமடைகிறது. இதில் குழப்பம் என்னவென்றால் இந்த வெப்பமடைந்த பகுதி என்ஸலாடஸின் தெந்துருவத்தில் மட்டுமே காணப்படுகிறது. பரவலாக எல்லாபகுதியிலும் அல்லவா இந்த வெப்பம்டைதல் ஏற்படவேண்டும் ஏன் தெந்துருவத்தில் மட்டும் இப்படி என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். அமெரிக்க வின்வெளி ஆய்வாளர்கள் அதற்கு பதி தருகின்றனர். பொதுவாக சுழலும் எந்த ஒரு பொருளின் பொருன்மை அல்லது திரட்சி மத்திய ரேகையில் அதாவது அப்பொருளின் நடுவில் இருந்தால் சீரான சுழற்சி அல்லது சுற்றுவட்டபாதை அமைந்திருக்கும். இந்த பொருன்மை அல்லது திரட்சி நடுப்பகுதியிலின்றி பிர பகுதிகளில் சிதறியிருந்தால் சுழற்சி சீராக இருந்தாலும் சுழலும் அச்சு சுற்றிவரும் பாதை நிலையற்றதாக சீரில்லாமல் இருக்கும். என்ஸலாடஸில் மிஅதமான வெப்பம் கொண்ட நீர் அல்லது வெப்பமான சிலிக்கேட்டால் ஆன பாறைத்தன்மைக் கொண்ட நடுப்பகுதி குறைந்த அழுத்தம் கொண்ட பெரிய படிகத்தொகுதியாய் நின்று என்ஸலாடஸை சுழலச் செய்யும். இதில் சுழலும் அச்சு நிலையாக இருப்பினும் இந்த படிகத் தொகுதி என்ஸலாடஸின் தெந்துருவத்தில் சரிந்து நிற்கும். ஆக இதன் காரணம் என்சலாடஸின் மேற்பரப்பு ஐச்கட்டியாக காணப்படும் அதேவேளை தென் த்ருவப்பகுதி மற்ற பகுதிகளைவிட வெப்பமானதாக உள்ளது. அதாவது மேற்பரப்பின் கீழே வெப்பமான பொருளின் திரட்சி இருக்கிறது என்பதை உணர்த்தும் என்கின்றனர் கலிஃபோர்னியா பல்கலைகழகத்தின் புவி அறிவியல்துறையின் ஆய்வாளர்கள். இது சனியின் துணைக்கோளான என்ஸலாடஸிற்கு மட்டுமே நிகழ்ந்தது என்று சொல்ல முடியாது, இதே கதை யுரேனஸ் கிரகத்தின் துணைக்கோளான மிரான்டாவுக்கும் உள்ளிட்ட சிறிய துணைக்கோள்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். என்ஸலாடஸின் ஆய்வுகளில் கண்டறியப்பட்ட விடயங்கள் வின் உயிரியலாளர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளன. உயிர்வாழ்விற்கு அவசியமான நீரும் வெப்பமும் என்ஸலாடஸில் இருப்பதே அவர்களின் ஆர்வத்திற்கான காரணம். இந்த என்ஸலாடஸை ஆய்வு செய்யும் காஸ்ஸீன் ஆய்வுகலன் தொடர்பான பணியிலுள்ள முத்த அறிவியலாளரான பாப் பிரவுன் என்பவர், உயிர்வாழ்க்கைக்கு ஆதார்மான சில ரசாயன கட்டமைப்புகள் என்ஸலாடஸில் இருப்பதாக கூறியுள்ளார். எப்படி என்றாலும் தற்போதைய ஆய்வுகள் கூறுவது எல்லாம் என்ஸலாடஸின் குளிர்ச்சியான மேற்பரப்பிற்கு கீழான படிவங்களில் அல்லது நீர்பரப்பில் அதிக பட்சம் நுண்ணியிரிகள் வாழும் அளவு மட்டுமே உயிர்வாழ்வுதன்மையின் சாத்தியக்கூறு இருப்பதாக அரிஸோனா பல்கலைகழகத்தின் ஆய்வாளர் ஜெஃப்ரே கார்கெல் கூறுகிறார். என்ஸலாடஸில் உயிர் வாழ்வது என்பது ஏதோ ஊட்டி, கொடைக்கானல், சுவிட்சர்லாந்து அல்லது சீனவுக்கு சென்று வருவது போன்று அல்ல கடுமையான குளிர், ரசாயன சிக்கல் நிறைந்த சூற்றுச் சூழல் ஆகியவற்றை சந்தித்து சகித்து வாழக்கூடிய திறனும் ஆற்றலும் இருந்தாகவேண்டும் என்பது குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் யார் கண்டது எத்ரிகால சந்ததிகள் செவ்வாய் கிரகத்திலும், என்ஸலாடஸிலும் வீட்டு மனைகள் வாங்க விண்கலத்தில் இலவச பயணம் செல்லும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.