• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-21 10:52:12    
ஆயிரம் ஏரி

cri

சீனாவின் கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள செச்சியாங் மாநிலத்தில், ஆயிரம் தீவுகளைக் கொண்ட காட்சித் தலமொன்று உள்ளது.

அங்கு நீர் பளிங்கு போன்றது. தீவுகளும் காட்சியும் பசுமையானவை. இந்த ஏரி, செச்சியாங் மாநிலத்தின் தலைநகரான ஹாங்சோவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இதற்கும் உலக மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு பிரபல காட்சித் தலமான ஹூசான் மலைக்குமிடையிலான தூரம் சுமார் 150 கிலோமீட்டர் ஆகும்.

ஆயிரம் தீவு ஏரி என்றால், ஏரி நீர் தவிர, ஏனையவை, பெரிய, சிறிய தீவுகளாகும். பெரிய, சிறிய முத்துக்கள் போல, ஏரி நீரில் பறவைகள், பரவுகின்றன.

தீவுகளின் நிழல்களுக்கிடையில் வெண்ணிற மேகம் உலா போகின்றது. மீன்கள், தெளிந்த ஏரி நீரில் நெளிந்து விளையாடுகின்றன. ஆயிரம் தீவு ஏரியின் நீர் மிகவும் தரமானது.

9 மீட்டர் முதல் 12 மீட்டர் ஆழம் வரை, நீரைத் தெளிவாகக் காண முடியும். உலகில் முதலாவது சிறந்த நீர் என்றும், நாட்டின் முதல் நிலை நீர் என்றும் அது போற்றப்படுகின்றது.

ஏரி நீரை அருந்தலாம். ஆயிரம் தீவு ஏரியில் உலா செல்லும் போது, அங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களையும் உணரலாம். அவர்கள், தொன்மை வாய்ந்த தனிச்சிறப்பியல்பு மிக்க வாழ்க்கை நடத்துகின்றனர்.