
திபெத்திலுள்ள லோப இனம், மேங்பா இனம் ஆகியவற்றுக்கு மக்கள் தொகை குறைவு. இருப்பினும், முந்தைய தேசிய மக்கள் பேரவைகள், அவற்றுக்கு தலா ஒரு பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு அளித்துள்ளன. கடந்த மூன்றாண்டுகள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் போது, லோப இனத்துக்கு மத்திய அரசின் உதவியுடன் தீர்க்கப்படும் பிரச்சினைகள் பற்றி ஸியோ ஹொங் அரசிடம் நேரடியாக தெரிவித்தார். இதற்கு முன், இது நினைத்துக்கூடல் முடியாத விஷயமாகும். அவர் கூறியதாவது:
"கூட்டத்தின் போது, தலைவர் கு சிங் தேள லோப இன மக்கள் மீது பெரும் அக்கறை காட்டினார். திபெத் பிரதிநிதிக்குழுவுடன் அரசு பணி அறிக்கையை பரிசீலனை செய்த போது, லோப மக்களின் வாழ்க்கை எப்படி என தலைவர் கு சிங் தேள விசாரித்தார்." என்றார், அவர்.
மக்கள் பேரவை பிரதிநிதியாக ஸியோ ஹொங் செய்து வரும் பணி பற்றி பல்லாண்டுகளாக அவருடன் வேலை செய்துள்ள திபெத் இன கசா Tshering Yudron மனநிறைவு தெரிவித்தார். அவர் கூறியதாவது:
"நகரில் பணி புரியத் துவங்கிய போது, அவர் துணிவுடன் செயல்படவில்லை. தேசிய மக்கள் பேரவை பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவர் துணிவுடன், தடையின்றி செயல்படத் தொடங்கினார். பணியில் பெரும் முன்னேற்றம். அவர் புரியும் பணிகளனைத்தும், பொது மக்களுக்காகவே. அனைவரும் அவரை நேசிக்கின்றனர். உள்துறை மற்றும் சுகாதார பணியை அவர் செவ்வனே செய்கின்றார்." என்றார் அவர்.
|