|
உலகில் தலைசிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்
cri
|
 2006ஆம் ஆண்டு ஜெர்மன் உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் பிரெஞ்சு விளையாட்டு வீரர் Zinedine Zidane தலைசிறந்த வீரர் என்ற பட்டத்தை பெற்றதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் இன்று அறிவித்தது. இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னரே, பல்வேறு நாடுகளின் செய்தியாளர்கள் வாக்களிப்பு மூலம் இந்த முடிவை செய்தனர். Zinedine Zidane மிக அதிக வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றார். இத்தாலி அணியின் தலைவர் Fabio Cannavarro இரண்டாம் இடமும், இத்தாலியின் மற்றொரு வீரர் Andrea Pirlo மூன்றாம் இடமும் பெற்றனர். இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில், போட்டி துவங்கிய 7 நிமிடத்தில் Zinedine Zidane ஒரு கோல் போட்டார். ஆனால் கடைசியில், இத்தாலி அணி பெனால்டி கோல் போட்டி முறையில், பிரெஞ்சு அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது.
|
|