• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-12 08:53:28    
தமிழ் மூலம் சீனம் பாடம் 55

cri
கலை........வணக்கம் நேயர்களே. 听众们,你们好!இப்போது தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நேரம். தி. கலையரசி ராஜா இருவரும் உங்களுடன் தமிழிலும் சீனத்திலும் உரையாடுகிறோம். நீங்கள் தயாரா?

ராஜா........இந்த வகுப்பில் முதலில் கடந்த வகுப்பில் கற்பித்த உரையாடலை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

கலை.....கடந்த வகுப்பில் நாம் முக்கியமாக 3 கேள்வி வாக்கியங்களை படித்தோம். அவை

வொ மன் சியூ கைன் டியென் யீன் மா?

வொ மன் சியூ மைய் தூங் சி மா?

வொ மன் சியூ மைய் சைய் மா? என்பனவாகும்.

ராஜா.....ஆமாம். இந்த 3 வாக்கியங்களும் வினா வாக்கியங்கள் போகலாம் அல்லது போக முடியாது என்பதை சீன மொழியில் எப்படி பேசுவது? எனக்கு கொஞ்சம் தெரியும். நான் முதலில் சொல்லட்டுமா?

கலை......சொல்லுங்கள்.

ராஜா.....ஹோ பா வொ மன் சியூ கைன் தியென் யீன் பா.

ஹோபா வொ மன் சியூ மைய் சேய் பா.

ஹோபா வொ மன் சியூ மைய் தூங் சி பா.

கலை......ராஜா நீங்கள் நன்றாக உச்சரிக்கிறீர்கள். நாம் மீண்டும் 3 முறை இந்த மூன்று வாக்கியங்களை நினைவுபடுத்துவோம்.

ராஜா...... ஹோ பா வொ மன் சியூ கைன் தியென் யீன் பா. கலை..... ஹோபா வொமன் சியூ கைன் தியென்யீன் பா.

ராஜா..... ஹோ பா வொ மன் சியூ மைய் சேய் பா.

கலை......ஹோபா வொ மன் சியூ மைய் சேய் பா.

ராஜா.......ஹோ பா வொ மன் சியூ மைய் தூங் சி பா.

கலை.....ஹோ பா வொ மன் சியூ மைய் தூங் சி பா.

ராஜா.....அடுத்து இன்றைய புதிய வாக்கியங்களைப் படிக்கலாமா?என்ன படிக்க போகின்றோம் கலையரசி.

கலை......முதலில் நாம் மூன்று வாக்கியங்களை படிப்போம். சில சமயங்களில் நண்பர்கள் வெளியே போய் திரைப்படம் பார்க்கலாமா என்று அழைக்கும் போது எனக்கு நேரம் இல்லை. இப்போது போக முடியாது என்று வருத்தத்துடன் பதிலளிக்கின்றோம். அதை சீன மொழியில் இப்படி பேச வேண்டும்.

துய் பு ச்சி,

வொ மெய் யூ ஸ சியேன்.

சியா ஸு சியூ ஹோ மா?

இந்த வாக்கியம் நாம் முந்திய பாடங்களில் படித்தோம். ஆகவே உங்களை பொறுத்தவரை புதுசு இல்லை. அல்லவா?

ராஜா.....நான் சொல்லட்டுமா?

கலை......தாராளமாக சொல்லுங்கள்.

ராஜா...... துய் பு ச்சி,

வொ மெய் யூ ஸ சியேன்.

சியா ஸு சியூ ஹோ மா?

கலை.....நண்பர்களே. எங்களுடன் சேர்ந்து இந்த வாக்கியத்தை வாசியுங்கள்.

ராஜா......இந்த வாக்கியம் நாம் இன்று படிக்க வேண்டிய வாக்கியங்களில் முதலாவது வாக்கியமாகும். அடுத்த வாக்கியம் என்ன?

கலை.....நண்பர்கள் திரைப்படம் பார்க்க போகலாமா என்று கேட்கும் போது நம்மால் போக முடியும் என்ற சூழ்நிலையில் இப்படி பதிலளிக்கலாம்.

ஹோ பா வொ மன் இ சீ சியூ கைன் தியென் யீன் பா.

ராஜா......கலை பொருட்களை வாங்கப் போகலாமா என்று அழைக்கும் போது நம்மால் போக முடியும் என்ற சூழ்நிலையில் இப்படி பதிலளிக்கலாமா.

ஹோ பா வொ மன் இ சீ சியூ மைய் தூங் சீ பா.

கலை.....ராஜா இப்படி பதிலளிப்பது சரிதான். இந்த சூழ்நிலையில் நண்பர்கள் காய்கறி வாங்க போகலாமா என்று கேட்கும் போது நம்மால் போகமுடியும் என்ற சூழ்நிலையில் இப்படி பேசுவது நல்லது.

ஹோ பா வொ மன் இ சீ சியூ மைய் சைய் பா.

ராஜா.....கலை இந்த மூன்று வாக்கியங்களை படித்த பின் எனக்கு புரிந்தது. என்ன செய்ய போகலாமா என்று அழைக்கும் போது முடியாத சூழ்நிலையில்

துய் பு ச்சி,

வொ மெய் யூ ஸசியேன்.

சியா ஸு சியூ ஹோ மா? என்று சரியான முறையில் பதிலளிக்கலாம்.போக முடியும் சூழ்நிலையில்

ஹோ பா என்று பதிலளிக்க வேண்டும். அப்படிதானே.

கலை .....சரிதான். இந்த மூன்று வாக்கியங்களின் மாதிரியை கற்றுக் கொண்டுள்ளோம். இனி வினாக்களுக்கு விடையளிப்பது பற்றி உங்களுக்கு கஷ்டம் இல்லையே.

ராஜா......ஆமாம்.

கலை......ராஜா, இப்போது இந்த மூன்று வாக்கியங்களை ஞாபகத்தில் வைத்தீர்களா? மீண்டும் படிக்க முடியுமா?

ராஜா......படிக்கின்றேன். நன்றாக படிக்காவிட்டால் என்னை வேடிகையாக சிரிக்க கூடாது.

கலை......சரி. படியுங்கள்

ராஜா.....

ஹோ பா வொ மன் இ சீ சியூ கைன் தியென் யீன் பா.

கலை......சரி. இரண்டாவது வாக்கியம்

ராஜா...... ஹோ பா வொ மன் இ சீ சியூ மைய் தூங் சீ பா.

கலை.....நன்றாக உச்சரிக்கிறீர்கள். கடைசி வாக்கியம்

ராஜா..... ஹோ பா வொ மன் இ சீ சியூ மைய் சைய் பா.

கலை......ராஜா, பராவாயில்லை. நீங்கள் நன்றாக மூன்று வாக்கியங்களை படிக்கிறீர்கள்.

கலை......நண்பர்களே. இன்றைய வகுப்பு முடிவதற்கு முன் எங்களுடன் சேர்ந்து இந்த மூன்று வாக்கியங்களை வினா விடை முறையில் முழுமையாக படிப்போம்.

வொ மன் சியூ கைன் டியென் யீன் மா?

துய் பு ச்சி,

வொ மெய் யூ ஸசி யேன்.

சியா ஸு சியூ கைன் ஹோ மா?

ராஜா.... .வொ மன் சியூ கைன் டியென் யீன் மா?

துய் பு ச்சி,

வொ மெய் யூ ஸசி யேன்.

சியா ஸு சியூ கைன் ஹோ மா?

கலை.... வொ மன் சியூ மைய் தூங் சி மா?

ராஜா....... துய் பு ச்சி,

வொ மெய் யூ ஸசி யேன்.

சியா ஸு சியூ மைய் ஹோ மா?

கலை.......வொ மன் சியூ மைய் சைய் மா?

ராஜா......ஹோ பா வொ மன் இ சீ சியூ மைய் சைய் பா.