வாணி: மே 6ம் நாள் இடம்பெற்ற புகையிலை கட்டுப்பாட்டு பணி என்ற செய்தி தொகுப்பு பற்றி வேலூர், முனுகப்பட்டு பி.கண்ணன் சேகர் எழுதிய கடிதம். கலைமகள் வழங்கிய புகையிலைக் கட்டுப்பாடு பணி என்ற செய்தித் தொகுப்பு மூலம் சீனாவில் புகையிலைக் கட்டுப்பாட்டுப்பணிகள் தீவிரப்படுத்கியுள்ளதை அரிய முடிந்தது. பிரச்சாரம், செயல் வடிவம் ஆகியவற்றின் மூலம் தீமை தரும் புகையிலையை கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் முயற்சிகள் நலமிக்கவை என்று குறிப்பிட்டுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து மே 15ம் நாள் ஒலிபரப்பான சீன தேசிய இனம் நிகழ்ச்சி பற்றி வேலூர், திமிரி கே. ஏழுமலை தனது கடிதத்தில், சுவாங் தேசிய இனம் என்ற தலைப்பில் ஒலிபரப்பான சுவாங் இன மக்களில் நாட்டுப்புற பாடல் என்ற நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல் உருவான விதம், அப்பாடல் கூறும் கருத்துக்கள், அப்பாடல் பாடப்படும் விதம், அதற்கான காரணம் போன்ற விவரமான தகவல்களை அளித்தமை மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பானதாகவும் அமைந்தது. சுவாங் இன மக்களின் வாழ்க்கையில் நாட்டுப்புற பாடல் எந்த வகையில் கலந்துள்ளது என்பதை தெரிந்துகொள்ளமுடிகிறது என்பதை எண்ணும்போது வியப்பாகவுள்ளது என்று எழுதியுள்ளார்.
வாணி: அடுத்து இலங்கை காத்தான்குடி நேயர் மு.மு.மபாஸ் எழுதிய கடிதம்.ஜூன் 16ம் நாளில் சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் பற்றிய செய்தி தொகுப்பு கேட்டதாகவும், தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து பாலஸ்தீனத்தின் அபாஸ் தலைமை உதவி பெறுவது பற்றியும் கேட்டறிந்ததாகவும் மேலும் சீனக்கதை நிகழ்ச்சியில் மருந்து என்ற கதையின் இரண்டாம் பகுதியில் நோயைக் கட்டுபடுத்த மேற்கொள்ளப்பட்ட மூடநம்பிக்கையை பற்றி தெரிந்துகொண்டதாகவும், மலர்ச்சோலை நிகழ்ச்சியில் எகிப்து, துனீசியா, வட ஆப்பிரிக்கா, நைஜீரியா, தான்சானியா ஆகிய நாட்டவரின் பழக்க வழக்கங்களை தெரிந்துகொள்ள முடிந்தது என்றும் எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து கொங்கம்பாளையத்திலிருந்து டி.லோகநாதன் என்பவர் எழுதிய கடிதம். இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொண்டபடியே திருப்பூரில் நேரம் கிடைக்கும்போது வேலையும் செய்யும் இவர் ஓராண்டுக்கு முன்பிருந்தே சீன வானொலி நிகழ்ச்சிகளை கேட்டு வருகிறார் ஆனால் தற்போது ஒரு பக்கம் படிப்பு, மறுபக்கம் வேலை என்ற காரணத்தால் தொடர்ந்து நிகழ்ச்சிகளை கேட்க இயலவில்லை, என்றாலும் நிகழ்ச்சிகள் மறுஒலிபரப்பு செய்யப்படுவதால் அவ்வப்போது நிகழ்ச்சிகளை சில நிமிடங்கள் செவிமடுத்து வருகிறார். 17வது அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றக் கருத்தரங்கு குறித்த சீன தமிழொலி இதழை படித்து மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும், அதில் நேஅர்ய் கூறிய கருத்துக்களை படித்து சீன வானொலிக் குடும்பத்தின் நட்பையும், கௌரவிப்பையும் அறிந்து மகிழ்ச்சியடைந்ததாகவும் எழுதியுள்ளார்.
வாணி: உங்கள் கருத்துக்களுக்கு நன்றி லோகநாதன். நீங்கள் நேயர் மன்றத்தில் இணைய ஆவல் வெளியிட்டிருந்தீர்கள், இது தொடர்பான தகவல்கள் உங்களுக்கு கடிதம் மூலம் அனுப்பிவைக்கப்படும். படிப்புக்கும், பணிக்கு நடுவில் நேரம் கிடைக்கும்போது நிகழ்ச்சிகளை செவிமடுத்து உங்கள் கருத்துக்களை எழுத மறக்கவேண்டாம்.
|