• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-12 16:06:51    
போதலா மாளிகைக்கான பராமரிப்பு

cri

சிங்ஹாய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்ட பின் போதலா மாளிகையைப் பார்வையிடும் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தொல் பொருள் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட ஆவணம் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜுலை திங்கள் முதல் நாள் சிங்ஹாய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு நாளும் திபெத் தன்னாட்சி பிரதேசத்துக்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5000, 6000ஐ எட்டக் கூடும். பயணிகள் முதலில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தலம் என்ற முறையில், போதலா மாளிகை குறிபிட்ட அளவு பயணிகளை மட்டுமே வரவேற்கும் திறன் கொண்டதாகும்.

புதிய நடவடிக்கையின்படி, ஜுலை திங்கள் முதல் நாள் முதல், ஒவ்வொரு நாளும் 2300 பயணிகளை போதலா மாளிகை வரவேற்கும். நெரிசலைத் தவிர்க்க சுற்றுலா நெறியும் வகுக்கப்பட்டுள்ளது. போதலா மாளிகையில் பயணிகள் தங்கும் நேரம் குறைக்கப்பட்டு, சில மண்டபங்களுக்குள் பயணிகள் நுழைய அனுமதிக்கப்படாமல், வெளியே இருந்தபடி பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.