• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-13 22:58:14    
கழிப்பறையை தொட்டிகள் சேகரிப்பது

cri
கழிப்பறையை தொட்டிகள் சேகரிப்பது

அமெரிக்காவின் டெனிஸ் பிர் அம்மையார், பழைய கழிப்பறை தொட்டிகளைச் சேகரிப்பதில் பேரார்வம் காட்டுகிறார். இருப்பினும் அவர் சேகரித்த கழிப்பறை தொட்டிகள் எல்லாம் பழமை வாய்ந்தவை. இது வரை, அவர் சேகரித்த மூன்று பழமை வாய்ந்த 3 கழிப்பறை தொட்டிகள் அவருடைய வீட்டின் பின் புறத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 12 கழிப்பறை தொட்டிகளை வைக்க முடியும். இந்த கழிப்பறை தொட்டிகள் பழமை வாய்ந்த கட்டிடங்களுடன் சேர்ந்து நாசப்படுத்தப்படுவதை அவர் சகித்துக்கொள்ள முடியாமல் இருப்பதாக அவர் கூறினார்.

கற்களை எரிப்பதன் மூலம் சமைப்பது

ஒஷாயானிய பகுதியிலுள்ள பிஜி நாட்டின் தாவெவோனி தீவில் வாழும் பொலினிசிய மக்களின் சமையல் முறை, தனிச்சிறப்பு வாய்ந்த விளங்குகிறது. அவர்கள் முதலில் தரையில் ஒரு குழியைத் தோண்டி, அதில் நிறைய விறகுகளை வைத்து, அதன் மேல் மண் போடுகிறார்கள். பிறகு மண் மேல் கற்களை ஒழுங்கான முறையில் வைக்கின்றார்கள். பின்னர், அவற்றின் மேல் முன்னதாக கழுவப்பட்ட வாசனை பொருட்களுடன் கூடிய உணவு பொருட்களை வைக்கின்றனர். இந்த உணவு பொருட்கள் எல்லாம் வாழை இலைகளால் கட்டப்பட்டு அவற்றின் மேல் மண் பூசப்படுகிறது. இரண்டொரு மணி நேரத்துக்குப் பின், மண்ணை நீக்கினால், உணவுப்பொருட்களை உட்கொள்ள முடியும்.

மறதி நோய்

25 வயதான பிரிட்டிஷ் ஆண் ஒருவர், கடந்த ஆண்டு திடீரென நினைவாற்றலை இழந்தார். தாம் யார்? தாம் எங்கே வசிக்கிறார்? என்பது அவருக்கே தெரியாது. தமது குடும்பத்தினரையும் நண்பர்களையும் அறவே இனம் காண முடியவில்லை. அவருடைய நினைவாற்றல் குழந்தை பருவத்திற்குத் திரும்பியுள்ளது. கடந்த சில திங்களாக, எவ்வாறு இனம் தெரியாத குடும்பத்தினருடன் பழகுவது என்பது பற்றி அவர் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டி நேரிட்டது. காரணம், அவர் மிகவும் அரிதாக காணப்படும் விலகல் தன்மை வாய்ந்த மறதி நோயால் பிடிக்கப்பட்டிருக்கிறார். தற்போது, பிரிட்டனில் இத்தகைய நோயாளிகள் 13 பேர் உள்ளார்கள்.