300 அனாதைக் குழந்தைகளின் அவர்களின் அம்மா
cri
சீன வானொலி நிலையம், இன்றைய சீன மகளிர் நிகழ்ச்சியில் 300 அனாதைக் குழந்தைகளின் அம்மா zhangyin அறிமுகப்படுத்துக்கிறோம். சீனாவின் மத்திய பகுதியில் உள்ள அன்குய் மாநிலத்தின் புஃ யாங் நகரில், அனாதைக்குழந்தைகள் அதிகமாக இருக்கின்றனர். அவர்களின் பெற்றோர்கள் எய்ட்ஸ் நோய் வாய்பட்டு காலமாகி விட்டனர். சிறு வயதிலிருந்தே வாழ்க்கையின் துன்பங்களை சகித்துக் கொண்டவர்கள். ஒரு நாள் "அம்மா" என அவர்களால் அழைக்கப்பட்ட பெண் தோன்றினாள். அதன் பின் அவர்களின் இன்ப வாழ்க்கை துவங்கியது. Nan Nan என்ற இனம் பெண்ணுக்கு வயது 16. நான்கு ஆண்டுகளுக்கு முன், எய்ட்ஸ் நோயால் அவருடைய பெற்றோர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். Nan Nan அனாதையானாள்.
அவருக்குத் தாயிடமிருந்து எய்ட்ஸ் கிருமி தொற்றியது. Nan Nan துன்பங்களில் சிக்கிக் கொண்ட போது, Zhang Ying என்னும் 37 வயதுப் பெண்ணை அவர் சந்தித்தார். பத்தாண்டுகளுக்கு முன்பு, புஃ யாங் நகரில் ஆடை மற்றும் உணவு வணிகத்தில் அவர் ஈடுபட்டார். விவேகம் மற்றும் ஈடுபாட்டினால், அவரின் வியாபாரம் அப்பகுதியில் மிகவும் புகழ் பெற்றது. 2003ஆம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் ஒரு நாளிரவு, தற்செயலாக Zhang Ying முதன்முதலாக Nan Nanஐ சந்தித்தார். Nan Nanயின் நிலைமை கண்டு வருந்தினார். தற்போது, நான் தாயாக மாறியுள்ளேன். இந்த குழந்தை சிறு வயதிலேயே காலத்தில், பெற்றோரை இழந்தால் மிக துன்பமான நிலையில் இருந்தது மட்டுமல்ல எய்ட்ஸ் நோயும் தொற்றியது. எனவே பள்ளிக்குச் செல்ல முடியாது எனறார் அவர். அடுத்த நாள், Zhang Ying குளிருக்குப் பாதுகாப்பான உடைகளையும், கேக்கும் கொண்டு வந்து நான் நானுக்கு கொடுத்தார். அது தவிரவும், 300 யுவானும் Zhang Ying நான் நானுக்கு அளித்தார். இருந்த போதிலும், வீட்டுக்கு திரும்பிய பின், Zhang Ying மிகவும் கவலைப்பட்டார். சிகிச்சை பெறுவதற்காக, அவர், Nan Nanஐ பெய்ஜிங்கிற்கு அழைத்து வந்தார்.
வசந்த விழாவுக்கு 4-5 நாட்களுக்கு முன்பு நான் அவரை பெய்சிங்கிற்கு அழைத்து வந்தேன். நோய் குணமாகி விட்டதால், வாழ்க்கை மீதான நம்பிக்கை Nan Nanக்கு மீண்டும் திரும்பியது. கடினமாக உழைக்கும், கவலையில்லாத குழந்தையாக Nan Nan மாறினார். Nan Nan அடைந்த மாற்றத்தைக் கண்டு Zhang Ying மகிழ்ச்சி அடைகின்றார்.
|
|