• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-14 19:26:28    
உலக சாதனையாளர் லியு சியாங்

cri

சீனாவின் தடகள ஓட்டப்பந்தய வீரர் லியு சியாங் 110 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்திற்கான புதிய உலக சாதனையை படைத்துள்ளார். ஸ்விடசர்லாந்தின் லௌசேன் நகரில் நடைபெறும் சர்வதேச அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 12.88 வினாடிகளில் 110 மீட்டர் தடை ஓட்டப்பந்தய எல்லைக்கோட்டை தாண்டி புதிய உலக சாதனையை படைத்துள்ளார் லியு சியாங். முன்னதாக 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் 110 மீட்டர் தடை ஓட்டப்பந்தயத்தின் உலக சாதனை அளவான 12.91 என்ற நேரத்தை சமன் செய்ததன் மூலம், 1993ம் ஆண்டில் பிரிட்டன் நாட்டு காலின் ஜாக்சன் படைத்த உலக சாதனையை சமன் செய்தார் லியு சியாங். பறக்கும் மனிதன் என்று சீனர்களால் அழைக்கப்படும் லியு சியாங்கின் இந்த உலக சாதனை ஓட்டம் அவருக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றாலும், அவரது கவனம் தற்போது 2008ம் ஆண்டின் பெய்சிங் ஒலிம்பிக் போட்டியில்தான் என்று அவரது பயிற்சியாளர் குறிப்பிடுகிறார். உலக சாதனை படைத்ததைத் தொடர்ந்து லியு சாங்கை சூழ்ந்து அவருக்கு இடைஞ்சல் ஏதும் ஏற்படுத்தி அவரது கவனத்தை சிதறடிக்கவேண்டாம் என்று அவரது பயிற்சியாளர் மக்களையும், ஊடகங்களையும் கோரியுள்ளார்.