• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-14 19:30:54    
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி

cri

டென்னிஸ் விளையாட்டின் முக்கிய போட்டிகளில் ஒன்றாக கருதப்படுவது விம்பிள்டன் டென்னிஸ் போட்டி. நீண்ட வரலாறு கொண்ட இந்தப் போட்டி கிராண்ட் ஸ்லாம் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற, பெரிய அளவிலான, அதிக பரிசுத்தொகை மதிப்பு கொண்ட போட்டிகளில் முக்கியமான ஒன்று. இவ்வாண்டின் விம்பிள்டன் போட்டியில் ஆடவர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஒற்றையர் ஆட்டத்திலும், பிரான்ஸ் நாட்டு அமேலி மௌரிஸ்மோ மகளிர் பிரிவு ஒற்றையர் ஆட்டத்திலும் வெற்றி பெற்றனர். ஆடவர் பிரிவின் இரட்டையர் ஆட்டத்தில் அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையன் இணை வெற்றி பெற்றது, பெண்கள் பிரிவின் இரட்டையர் ஆட்டத்தில் சீன மங்கையர் யான் ஸீ மற்றும் ஸெங்க் சி ஆகியோர் வெற்றி பெற்றனர். கலப்பு இரட்டையர் ஆட்டத்தை இஸ்ரேலின் ஆண்டி ராம் மற்றும் ரஷ்யாவின் வேரா ஸ்வோனரேவா இணை வென்றது.

மகளிர் இரட்டையர் பிரிவு:

சீனாவின் செங் சி, யான் ஸீ இணை கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்று, கிராண்ட் ஸ்லாம் என்றழைக்கப்படும் புகழ்பெற்ற, பெரிய அளவிலான, அதிக பரிசுத்தொகை மதிப்பு கொண்ட போட்டியை வென்ற முதல் சீன இணை என்ற பெருமையை பெற்றனர். இந்த பெருமைக்கு மேலும் அழகு சேர்க்க விம்பிள்டன் போட்டியின் வெற்றியும் இப்போது அவர்கள் பக்கம். ஸ்பெயின் நாட்டு ருவானொ பஸ்குவால் மற்றும் அர்ஜென்டினாவின் பௌலோ சுவாரேஸ் இணையை விம்பிள்டன் இறுதியாட்டத்தில் 6- 3, 3- 6, 6- 2 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இவ்வாண்டின் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் போட்டி வெற்றியை தங்களுடையதாக்கினர். பிரெஞ்சு ஓபன் போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் இது 3வது பெரிய வெற்றியாகியிருக்கும் ஆனாலும் விம்பிள்டனின் வெற்றியின் மூலம் டென்னிஸ் ஆட்ட தரவரிசையில் இரட்டையர் பிரிவில் அவர்களின் இடம் 3வதும், 4வதுமாக முன்னேறியுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தி. விம்பிள்டனின் காலிறுதிப் போட்டி வரை தகுதி பெற்ற சீன வீராங்கனை லீ நா, ஒற்றையர் பிரிவு உலகத் தரவரிசையில் மேலும் முன்னேறி தற்போது 22வது இடத்தில் இருக்கிறார்.