• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-18 17:01:18    
கண்புறை நோய் தடுப்பு முயற்சி

cri
கிளீட்டஸ்......நீங்கள் கொஞ்சம் விபரமாக சொல்லுங்கள்.

கலை......சீனாவின் வட கிழக்கிலுள்ள லியோநின் மாநிலம் கண்புறை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக மாநில அரசு 2 கோடி யுவான் ஒதுக்கியுள்ளது. மாநிலத்தின் முக்கிய கடலோர நகரான டாலியன் நகர அரசு மேலும் நுணுக்கமாக இந்த வேலையை நிறைவேற்றியுள்ளது. நகராட்சித் துணைத் தலைவர் சன் குவாங் தியென் கூறியதாவது.

கிளீட்டஸ்....... "கண்ணொளி முதலிடம்" என்னும் திட்டத்தை நடைமுறைபடுத்துவதன் அடிப்படையில் கடந்த 8 ஆண்டுகளாக 40 லட்சம் கண்புறை நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் கண்பார்வை மீட்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டில் மட்டும், 6 லட்சம் நோயாளிகளுக்கு கண்ணொளி சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.

கலை.....சமீபத்தில் சர்வதேச அரிமா சங்கத்தின் தலைவர் குசியாக் சீனாவில் பார்வையிட்டார். "கண்ணொளி முதலிடம்" என்னும் திட்டம் சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் சீனாவில் நிலைமை என்ன என்பதை மதிப்பிடுவது அவருடைய பணி பயணத்தின் நோக்கமாகும். அவர் கூறியதாவது

கிளீட்டஸ்.......சீனாவும் சர்வதேச அரிமா சங்கமும் "கண்ணொளி முதலிடம்" என்னும் திட்டத்தை கூட்டாக முயற்சித்து நிறைவேற்றுவது பன்னாடுகளுக்கு வெற்றிகரமான சர்வதேச ஒத்துழைப்பு மாதிரியை வழங்கியுள்ளன என்றார்.