• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-18 17:01:18    
ஐததின் மனித உடல் வளர்ச்சிக்கு தரும் பயன்பாடு

cri
ராஜா.....இன்றைய நிகழ்ச்சியில் நாம் முக்கியமாக நண்பர்களுக்கு என்ன சொல்லப் போகிறோம்?

கலை......ராஜா மே திங்கள் 15ம் நாள் சீனாவில் எந்த நாளாக கொண்டாடப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

ராஜா.....எனக்கு தெரியாது. அப்போது விடுமுறைக்காக தில்லிக்கு போயிருந்தேன். இங்கே இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கும்.

கலை.....ஆமாம். நான் உங்களுக்கு மே 15 பற்றிய தகவல் சொல்கின்றேன்.

ராஜா.....சரி, சொல்லுங்கள்.

கலை......மே திங்கள் 15ம் நாள் சீனாவில் அயோடின் பற்றாக்குறை நோய் தடுப்பு நாளாக கொண்டாடப்பட்டது.

ராஜா.....அந்த நாளில் சீனாவில் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன?

கலை.......இவ்வாண்டு மே திங்கள் 15ம் நாளன்று சீன சுகாதார அமைச்சகம் இது பற்றிய ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அமைச்சகம் இந்த நடவடிக்கை மேற்கொண்டது மட்டுமல்ல சீனாவின் தென் பகுதியில் உள்ள ச்செச்சியாங் மாநிலத்தின் தலைநகரான ஹாச்சோவில் செயல்படும் நோய் கட்டுப்பாட்டு மையம் கடந்த 10 ஆண்டுகளாக உணவு உப்பு மூலம் அயோடின் சத்தை அதிகரிக்கும் கண்காணிப்பு கையோடு ஒன்றை வெளியிட்டது.

ராஜா.....பரவாயில்லையே. ஹாச்சோ நகரில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது சிறப்பானது. பாராட்டதக்கது.

கலை.....ஆமாம். அவர்களின் முயற்சியுடன் ஹாச்சோவில் வாழ்கின்ற குழந்தைகளின் சராசரி அறிவுத் திறன் 110 இலிருந்து 114.7 ஆக உயர்ந்துள்ளது. அதாவது முந்திய அறிவுத் திறன் நடுத்தர நிலையிலிருந்து சிறந்த நிலைக்கு உயர்ந்துள்ளது என்று தகவல் கூறுகின்றது.

ராஜா.....நல்ல செய்தி. இவ்வாண்டு மே திங்கள் 15ம் நாள் சீனாவின் 13வது அயோடின் பற்றாக்குறை நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை நாளாகும். நான் சொன்னது சரியா?

கலை.....சரிதான். அயோடின் பற்றாக்குறை இருந்தால் காமாலை நோய் ஏற்படும் என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால் அறிவுத் திறன் வளர்ச்சியுடனும் இது தொடர்புடையது என்பதை பலரும் அறிய வில்லை.

ராஜா......ஆமாம். ஆகவே மருத்துவ வல்லுநர்கள் மட்டுமல்ல சாதாரண மக்களும் இந்த நோய் தடுப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

கலை.....நீங்கள் சொன்னது சரிதான். சாதாரண மக்கள் நிபுணர்கள் காட்டிய வழியில் அயோடின் கலந்த உணவு உப்பு உட்கொள்ள வேண்டும். அதேவேளையில் அறிவியல் வல்லுனர்களும் இந்த நோய் சிகிச்சையில் மாபெரும் முயற்சியை மேற்கொண்டு மக்களுக்கு சேவை புரிய வேண்டும்.