• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-18 17:01:18    
புள்ப்பு காரம் கொண்ட கேலிபுஃராவா

cri
கலை.....வணக்கம் நேயர்களே. இப்போது சீன உணவு அரங்கம் நேரம். ராஜாராம், கலையரசி இருவரும் இந்த நிகழ்ச்சியில் புளிப்பும் காரமும் கொண்ட காலிபுஃளவர் கறி சமைப்பது பற்றி கூறுகின்றார்கள்.

ராஜா......கலை இந்த காய்கறி உணவு புதுசாக இருக்கே.

கலை.....ஆமாம். சீனாவில் வெறும் காய்களை மட்டுமே பயன்படுத்தி பல்வகை சுவையான உணவுகளை சமைக்க முடியும்.

ராஜா.....ஆமாம். தமிழ் நாட்டிலே முக்கியமாக குழம்பு, ரசம் போன்றவற்றை சாதத்தின் மேல் ஊற்றிப் பிசைந்து சாப்பிட வேண்டும். இங்கே வழக்கம் அப்படியிலாலை.

கலை...... சீன மக்கள் சாதம் உண்ணும் போது பல காய்களை தனித்தனியாக சமைத்து தனித்தனியே உண்கிறார்கள்.

ராஜா.....சரி இந்த புளிப்பும் காரமும் கொண்ட காலிபுஃளவர் எப்படி சமைப்பது. இதற்கு தேவையான பொருட்கள் என்ன? அது பற்றி நமது நண்பர்களிடம் சொல்லுங்கள்.

கலை.....கண்டிப்பாக தருவேன். நீங்கள் பாருங்கள். முதலில் 700 கிராம் காலிபுஃளவர் தேவை. அப்புறம் உணவு எண்ணெய் 40 கிராம். பூண்டு இரண்டு. மிளகாய் வற்றலல் 5. கொஞ்சம் மிளகு. அப்புறம் ஒரு தேக்கரண்டி சர்க்கரை. 2 தேக்கரண்டி வினிகர். வினிகர் கிடைக்காவிட்டால் புளி பயன்படுத்தலாம்.

 

ராஜா...... காலிபுஃளவர் சமைப்பதற்குத் தேவையான பொருள்கள் அனைத்தையும் சொல்லியாச்சா?

கலை.....இல்லை. முக்கியமானது இன்னமும் நான் சொல்ல வில்லை. சீனாவில் சில காய்களை சமைக்கும் போது உருளைக் கிழங்கு மாவு அதிகமாக தேவை. ஏனென்றால் காய்கறிகளை சமைக்கும் கடைசியில் உருளைக் கிழங்கு மாவை இரண்டு கரண்டி தண்னீரில் போட்டு கரைத்து காய்களின் மேல் லேசாக தெளிக்க வேண்டும். இது சூடாகும் போது காய்க்குள்ளே சாறு சேர்ந்து கொஞ்சம் கட்டியாகும். அப்போது பார்க்க அழகாக இருக்கும்.

ராஜா.....ஆகவே காலிபுஃளவர் சமைக்கும் போது இந்த உருளைக் கிழங்கு மாவு கரைத்த தண்ணீர் தேவை. அல்லவா?

கலை.....ஆமாம்.