• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-17 10:39:04    
பீடபூமியில் சுற்றுலா வளர்ச்சி

cri

சிங்ஹேய்-திபெத் ரயில் பாதையின் பீடபூமி தொடர் வண்டியில், சிங்ஹேய் ஏரி, கொகொசிலி, யாங்சி ஆற்றின் ஊற்று மூலம், தாங்குரா மலை நுழைவாயில், வட திபெத்திலுள்ள ச்சியாங் தாங் புல்வெளி உள்ளிட்ட இயற்கை காட்சிகளைப் பார்ப்பது மட்டுமல்லாது, திபெத் இனத்தின் பண்பாட்டையும் பயணிகள் உணரலாம். இது குறித்து, திபெத் சுற்றுலா ஆணையகத்தின் துணை இயக்குநர் ச்சானோ பேசுகையில், இந்த ரயில் பாதை, திபெத் சுற்றுலா துறைக்கு வளர்ச்சி வாய்ப்பை கொண்டு வருகிறது. ஜூலை முதல் நாள் முதல், திபெத்தில் பயணம் மேற்கொள்ள வரும் பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரிக்கும் என்று கருத்து தெரிவித்தார். பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதினால், திபெத் சுற்றுலா துறை மற்றும் தொடர்புடைய துறைகள், மேலும் அதிகமான வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறவுள்ளன.

அத்துடன், சிங்ஹேய்-திபெத் ரயில் பாதையின் திறப்பு, திபெத்துக்கும் சீனாவின் உள்பிரதேசங்களுக்கும் இடையிலான தொடர்ப்பை வலுப்படுத்தியது மட்டுமல்ல, சீன-தெற்காசிய பொருளாதார பரிமாற்றத்தை மேற்கொள்ளும் முன்னணி இடமாக திபெத், படிப்படியாக மாறி வருகிறது. நேபாளத்தின் வணிகர் துலதார் நிர்வாகிக்கும் வெள்ளி பொருட்கள் கடை, லாசா நகரின் பாகோ வீதியில் மிகவும் புகழ்பெற்ற நேபாள கடையாகும். அண்மையில் எமது செய்தியாளர் அங்கே சென்று பேட்டி கண்ட போது, புதிதாக கட்டப்பட்ட ஒரு இடத்தைப் பார்த்தார். செய்தியாளரிடம் பேசிய துலதார், ஒரு லட்சத்து 50 ஆயிரம் யுவானை முதலீடு செய்து இக்கடையை சீராக்க தாம் தீர்மானத்தன் முக்கிய காரணம். சிங்ஹேய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்து திறந்துவிடப்பட்டதன், எதிர்கால வளர்ச்சியிலான நம்பிக்கையே என்று கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

இந்த ரயில் பாதை கட்டி முடிக்கப்பட்டது என்பது சீனாவின் திபெத்திற்கும், நேபாளத்துக்கும், ஒரு நல்ல நிகழ்வாகும். சீனாவின் பெருமளவான உற்பத்தி பொருட்கள், இந்த ரயில் பாதை மூலம், சிங்ஹேய் மாநிலத்திலிருந்து லாசாவுக்கு ஏற்றியிறக்கப்படலாம். அப்பொழுதும், நாங்கள், சிங்ஹேய் மாநிலத்திலிருந்து, பொருட்களை நேபாளத்துக்கு ஏற்றியிறக்கலாம் என்றார் அவர்.

தற்போது, லாசாவில் துலதாருடன் ஒத்த கருத்தைக் கொள்ளும் தெற்காசிய வணிகர்கள் மிகவும் அதிகம். சீனாவின் உள் பிரதேசத்தின் வணிகர்கள் பலர், லாசாவுக்கு வந்து, வர்த்தக அலுவலகத்தை நிறுவினர். எதிர்காலத்தில், லாசா நகர், சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்குமிடையே வர்த்தகத்தில் இடம் மாற்ற நிலையமாக மாறும். இந்த ரயில் பாதை, சீனாவுக்கும், நேபாளம், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்குமிடையே எல்லை வர்த்தகத்தை மேம்படுத்தும் என்று, திபெத் இன தன்னாட்சி பிரதேசத்தின் சமூக அறிவியல் கழகத்தின் பொருளாதார நெடுநோக்கு ஆய்வகத்தின் துணை தலைவர் வாங் தே யுவான் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

சிங்ஹேய்-திபெத் ரயில் பாதை போக்குவரத்து திறந்துவிடப்பட்ட பிறகு, சீனாவின் உள் பிரதேசத்துக்கும் லாசாவுக்கும் இடையே போக்குவரத்து வசதி மேம்படுத்தப்பட்டது. பெருமளவிலான சரக்குகள் லாசாவுக்கு ஏற்றிச்செல்லப்பட்டு, பிறகு, இதர வண்டிகள் மூலம் ஏற்றியிறக்கப்படலாம். இதனால், ஏற்றுமதி சரக்கு அளவு பெருமளவில் அதிகரிக்கும். சில ஆண்டுகளில், திபெத்தின் வெளிநாட்டு வர்த்தகம், விரைவான வளர்ச்சியடையும். சிங்ஹேய்-திபெத் ரயில் பாதை கட்டிமுடிக்கப்பட்ட பிறகு, எல்லை வர்த்தக நுழை வாயில் மேலும் நெருங்கியுள்ளது. சீனாவிலிருந்து தெற்காசியாவுக்கான ஏற்றுமதி பொருட்களின் ஏற்றியிறக்கல் வழி உருவாக்கப்பட்டது என்றார்.