• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-17 16:57:34    
பல்வேறு நாடுகளில் திருமணத்திற்கு இணங்கும் படி கேட்கும் முறைகள்

cri

பிரிட்டனில்

பிரிட்டனின் ஜோர்க் நகரில் இளைஞர்கள் தமது துணைவியைத் தேடுவது எளிது. ஏனெனில் இந்நகரில் திருமண வயது அடையும் மகளிர், போக்குவரத்து விளக்கு போன்ற வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றனர். அப்போது அவர்கள் வெவ்வேறான நிறங்களுடைய இறுக்கமான சட்டைகளைப் போடுவர். பச்சை நிற சட்டையை அணிந்தால், வாருங்கள்!தடையில்லாமல்!என்று பொருள் காட்டுகின்றனர். மஞ்சள் நிற சட்டையைப் போட்டால் பெரும்பாலும், பாதி வாய்ப்பு என்றும் சிவப்பு நிற சட்டையை அணிந்தால், நில், என்னை தொடாதே என்றும் பொருள் காட்டுகிறார்கள்.

இத்தாலியில்

இந்நாட்டின் சிசிலி தீவில் யுவன், யுவதிகள் திருமணத்திற்கு இணங்கும் படி கேட்பதில் முன்முயற்சி உரிமை பெரும்பாலும் யுவதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றது. யுவதிகள் இளைஞர்களின் முன்னிலையில் தமது தலைமுடியை ஒரு கூர்மையான கூந்தலாகப் போட்டால் உங்களை நான் விரும்புகிறேன் என்று பொருள் காட்டுகிறார்கள்.

தான்சானியாவில்

தான்சானியாவில் மசயி இன மக்களிடையில் இளைஞர்கள் தமக்கு பிடித்தமான துணையைத் தேடிப்பிடிக்க வேண்டுமானால், அவர் முதன்முதலில் சிங்கம் போன்ற ஒரு கொடிய விலங்கைக் கொன்று, தமது துணிச்சலை காட்டுகிறார்கள். இப்படி செய்தால் தான், அவர் தமக்கு பிடித்தமான துணைவியைத் தேடிப்பிடிக்க முடியும்.

சுரினான் நாட்டில்

தெற்கு அமெரிக்க கண்டத்தின் வட பகுதியில் அமைந்துள்ள சுரினான் நாட்டில் அமெரிக்க இந்தியர்கள் சிகரேட்டை திருமணத்துக்கு இணங்கும் படி கேட்பதற்கான பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இளைஞர் தமக்குப் படித்தமான பெண்மணியை விரும்பினால், தமது பெற்றோரிடம் சொல்வார்கள். பிறகு அவருடைய பெற்றோர் மங்கலமானதோர் நாளைத் தேர்ந்தெடுத்து மகளிர் வீட்டுக்குச் சென்று சிகரேட்டை அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்குவார்கள். பெண்களின் தந்தையார் அதை ஏற்றுக்கொண்டால், சம்மதம் என்று பொருள்.

தெற்கு அமெரிக்க கண்டத்தில்

தெற்கு அமெரிக்காவின் மாவான்ஆன் இன மக்களிடையில் பெரும்பாலும் யுவதிகள் யுவன்களிடம் திருமணத்திற்கு இணங்கும் படி கேட்கிறார்கள். தமக்கு பிடித்தமான இளைஞர் வயலில் உழைப்பதைக் கண்டால் அவள் இந்த இளைஞருக்கு அருகில் சென்று அவருக்கு உதவி செய்வாள். இந்த இளைஞர் அவரை விட்டு விலகாமல் இருந்தால் தாம் இந்த யுவதியை விரும்புவதாக மறைமுகமாக கூறுகிறார்கள்.

ஆப்கானில்

இந்நாட்டின் சில பழங்குடி இனத்தவர்களிடையில் ஒரு இளைஞர் ஒரு பெண்மணியை விரும்பினால் அவர் அவருடைய வீட்டுக்கு முன் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுடுவார். இதன் மூலம் இந்தப் பெண்மணி மீதான தமது பாசத்தைக் காட்டுகிறார்.