கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டருக்கு மேலான பிரதேசத்தில் வாழும் திபெத் மறிமான்கள் 360 வகை உணவுகளை சாப்பிடுவதாக சீன அறிவியலாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். விரும்பி சாப்பிடும் தாவரங்கள், தேர்ந்தெடுத்து சாப்பிடும் தாவரங்கள், தற்செயலாகச் சாப்பிடும் உணவுகள் உள்ளிட்ட 5 வகை உணவுப் பொருள்களை திபெத் மறிமான்கள் உட்கொள்கின்றன. அவரை வகை, களை இனங்களும் இவற்றில் அடங்கும். திபெத் மறிமான், சீனாவில் மட்டுமே காணப்படும் விலங்காகும். முக்கியமாக வட திபெத்தின் Qiang Tang, சிங்காய் மாநிலத்தின் கே கே சி ரி, சிங்கியாங்கின் அர்கிம்சன் முதலிய மூன்று இயற்கை புகலிடங்களில் அவை வாழ்கின்றன. தற்போது, அங்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் மறிமான்கள் மட்டுமே உள்ளன.
|