கிழக்காசிய மகளிர் கருத்தரங்கு
cri
6வது கிழக்காசிய மகளிர் கருத்தரங்கு இன்று பெய்ஜிங்கில் துவங்கியது. வட கொரியா, ஜப்பான், மங்கோலியா, தென் கொரியா, சீனப் பெருநிலப்பகுதி, ஹாங்காங், மக்கெள, தைவான் ஆகியவற்றின் மகளிர் பிரச்சினை நிபுணர்களும், மகளிர் நிறுவனங்களின் பொறுப்பாளர்களுமாக சுமார் 300 பேர் இதில் கலந்து கொண்டனர். இந்த 2 நாள் கருத்தரங்கில், "ஆண்-பெண் சமத்துவமும் தொடர்ச்சியான வளர்ச்சியும்" என்பது பற்றி விவாதிக்கப்படுகிறது. சீன அரசவை மகளிர் மற்றும் குழந்தை பணி கமிட்டியின் நிரந்தர துணை தலைவர் Huang Qing Yi அம்மையார் பேசுகையில், இக்கருத்தரங்கு, கிழக்காசிய நாடுகளின் பெண்களுக்கு இடையே தொடர்பையும் புரிந்துணர்வையும் அதிகரித்து, ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் மேலும் விரைவுபடுத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
|
|