
திபெத்
தென்மேற்கு சீனாவில் அமைந்துள்ள திபெத், கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில், அரசியலும் மதமும் கலந்து ஆதிக்கம் செலுத்திய நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை சமுதாயத்தில் இருந்தது. திபெத் மக்கள் தொகையில் 5 விழுக்காட்டுக்குள்பட்ட மூன்று வகை பண்ணை சொந்தக்காரர்கள், அதாவது, பிரபுக்கள், உள்ளூர் அரசு அதிகாரிகள், உயர்நிலை மதகுருமார்கள், திபெத்தின் 95 விழுக்காட்டுக்கு மேலான நிலம் மற்றும் உற்பத்தி சாதனங்களைக் கைபற்றியிருந்தனர். ஆனால், திபெத்தின் மொத்த மக்கள் தொகையில் 95 விழுக்காட்டுக்கும் அதிகமான பண்ணை அடிமைகளும் இதர அடிமைகளும் தனிநபர் சுதந்திரமின்றி உற்பத்தி சாதனங்கள் ஏதுவும் இல்லாமல் அல்லல்பட்டனர். அவர்கள் மற்றவரால் வாங்கப்பட்டனர் அல்லது விற்கப்பட்டனர்.

திபெத் இன மங்கை
1949ம் ஆண்டு அக்டோபர் முதலாம் நாள், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டது. நவ சீனா நிறுவப்படுவதற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, "பொது வேலைத்திட்டத்திற்கிணங்க நவ சீனாவிலுள்ள பல்வேறு தேசிய இனங்களுக்கும் சம உரிமையும் கடமையும்"உண்டு. தேசிய இனங்கள் சமமானவை. தேசிய இன ஒற்றுமை, தேசிய இன பிரதேசத் தன்னாட்சி என்ற கொள்கையும், மத நம்பிக்கைச் சுதந்திரம் என்ற கொள்கையும் மேற்கொள்ளப்பட்டன. 1951ம் ஆண்டு மே திங்கள் 23ம் நாள் நடுவண் அரசு, திபெத் உள்ளூர் அரசுடன் பெய்ஜிங்கில் திபெத்தின் சமாதான விடுதலை பற்றிய உடன்படிக்கையில் கையொப்பமிட்டது. இதுவே, பிரபலமான 17 உடன்படிக்கைகள் எனபடுகிறது. இதனுடன் திபெத் அமைதியான முறையில் விடுதலை பெற்றது.
திபெத்தின் புகழ்பெற்ற வரலாற்று இயல் அறிஞர் பாசாங் வாங்து பேசுகையில், 17 உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டது, திபெத் வரலாற்றில் ஒரு பாய்ச்சல் முன்னேற்றத்தைக் கோடிட்டுக் காட்டுகின்றது என்றார். அவர் கூறியதாவது
திபெத், சமாதான முறையில் விடுதலை பெற்றது. அரசிறைமையின் ஒருமைப்பாட்டையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் இது பேணிக்காத்து, திபெத் இனத்துக்கும் நாட்டின் பல்வேறு தேசிய இனங்களுக்குமிடையிலான சமத்துவம் ஐக்கியம் ஆகியவற்றை நனவாக்கியுள்ளது என்றார்.
|