சீனப் பொருளாதார வளர்ச்சி
cri
இவ்வாண்டின் முதல் ஆறு திங்களில், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, 914430 கோடி யுவானாகும். கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது 10.9 விழுக்காடு அதிகமாகும். சீன தேசிய புள்ளி விவர பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் Zheng Jing Ping இன்று பெய்சிங்கில் செய்தியாளர் கூட்டத்தில் இதனை தெரிவித்தார். இவ்வாண்டில், சீனாவின் தொழிற்துறை உற்பத்தி, நிலையான சொத்து முதலீடு, நுகர்வுத் தேவை ஆகியவற்றின் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நிலையான சொத்துக்களில் முதலீடு, முக்கியமாக நில பேரம் இன்னமும் வலுவான நிலையில் இருக்கின்றது என்பது இதன் மூலம் தெரிகிறது. பொருளாதார வளர்ச்சி வேகமாவதுடன், இவ்வாண்டில், சீனாவில் வேலை வாய்ப்பு தரும் நிலைமையும் மேம்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
|
|