• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-19 09:52:01    
நேயர்களின் கருத்துக்களை வரவேற்கின்றோம்

cri

வாணி: கடந்த ஜூன் 18ம் நாளன்று திருச்சி மாவட்ட சீன வானொலி நேயர் மன்றத்தினர்,சீன வானொலி நிலையத்தின் 65ம் ஆண்டு நிறைவு, தமிழ் ஒலிபரப்பின் 43ம் ஆண்டு நிறைவு, தங்கள் மன்றத்தின் 14ம் ஆண்டு நிறைவு , பொது அறிவுப் போட்டி அறிமுக விழா, விடைத்தாள்கள் வழங்கும் விழா என முப்பெரும் விழாவை நடத்தியுள்ளனர். இவ்விழாவில் 37 நேயர்கள் கலந்து கொண்டுள்ளனர். விழாவில் சொந்தமாக செலவு செய்து அச்சடித்த 60 ஆயிரம் விடைத்தாள்களை அறிமுகப்படுத்தி விநியோகித்துள்ளனர். அன்பு திருச்சி மாவட்ட நேயர்களே, உங்களது முயற்சிகளுக்கு எமது பாரட்டுக்களும், நன்றிகளும். தாங்கள் அனுப்பிய ஒலிநாடாவும் எங்களுக்கு வந்து சேர்ந்தது.

க்ளீட்டஸ்: நிகழ்ச்சியின் முதல் கடிதம் நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா நேயர் கே.கே.போஜன் எழுதியது. பிப்ரவர் 18ம் நாள் இடம்பெற்ற சீன தேசிய இனக்குடும்பம் நிகழ்ச்சியில், மங்கோலிய ஆய்ர்கள் ஐரோப்பிய பயணம் என்ற செய்தியைக் கூறினீர்கள். மாட்டிறைச்சி வெட்டப்படும் இடம், சுத்தாமாக அவை வெட்டப்படுவது, வெட்டப்படும் நேரம் உள்ளிட்ட அவர்கள் மேற்கொள்ளும் சுகாதரா முறைகள் பற்றியும்அவர்கள் வளர்க்கும் ஆடுகள், மாடுகள் பற்றியும் பல நல்ல செய்திகளை கேட்டறிந்தேன். எனக்கு இது தொடர்பாக ஒரு விடயம் நினைவுக்கு வந்தது. இந்தியாவில் முன்னாள் தலைமையமைச்சர் மாண்புமிகு ஜவஹர்லால் நேரு பதவியிலிருந்தபோது, அப்போதைய உணவு அமைச்சராக மாண்புமிகு சி.சுப்ரமணியம் அவர்கள் இருந்தார். நேரு அவர்கள் திரு.சி.சுப்ரமணியத்தை அழைத்து இந்தியாவில் உணவு உற்பத்தியை பெருக்கவேண்டும் அதாவது பசுமை புரட்சியை செய்யவேண்டும் என்று கூறி வளர்ந்த நாடுகளுக்கு அனுப்பி அங்கு உளவு உற்பத்தியை அவர்கள் பெருக்கும் முறையை கண்டறிய செய்தார். அவர் பல நாடுகளுக்கு சென்று வந்தபிந்தான் படுமை புரட்சி ஏற்பட்டு இந்தியாவில் இன்று இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக உள்ளது. பால் உற்பத்தியிலும் வெண்மை புரட்சி ஏற்பட்டு உற்பத்தி பெருகியுள்ளது. இப்புரட்சிகளின் பயனாக இன்று உலகப் புகழ்பெற்ற கோவை விவசாய பல்கலைக்கழகம் உருவாகியுள்ளது என்பதை அறியமுடிகிறது. மங்கோலிய ஆயர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டது, பால் உற்பத்தியை பெருக்க பயன் தரும் பயணமாக அமையும் என்றே கூறவேண்டும் என்று எழுதியுள்ளார்.