முழுமையான சந்தை பொருளாதார தகுநிலை
cri
சீனாவின் முழுமையான சந்தைப் பொருளாதார தகுநிலையை முதன்முதலாக நியூஸிலாந்து 2004ஆம் ஆண்டில் அங்கீகரித்த பின்னர், இது வரை 57 நாடுகளின் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்று சீனத் துணை வணிக அமைச்சர் Gao Hu Cheng இன்று தெரிவித்தார். இந்த 57 நாடுகளில் ஆஸ்திரேலியா, பிரேசில், ஆர்ஜென்டினா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, ரஷியா, 10 ஆசியான் நாடுகள் முதலியவை அடங்கும். மேலும் பல நாடுகள் சீனாவின் இந்த தகுநிலையை அங்கீகரிப்பதுடன், பொருள் குவிப்பு விற்பனைக்கு எதிராக உள் நாட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் சர்வதேசச் சூழல் படிப்படியாக மேம்பட்டுள்ளது. சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு திறப்பு தொடர்பான சீனாவின் புகழ் மேலும் உயரும்.
|
|