• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-21 18:04:45    
2008 பெய்சிங் ஒலிம்பிக்ஸ்

cri

2008ம் ஆண்டில் பெய்சிங் மாநகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை "பசுமையான ஒலிம்பிக்காகவும்" "மக்கள் ஒலிம்பிக்காகவும்" நடத்த பெய்சிங் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவினர் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர். அதற்கான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன. பாதுகாப்பு ரீதியிலான கரிசனையில் காய்கறி வகைகளையும் கண்கானிப்பில் வைக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. 2008 பெய்சிங் ஒலிம்பிக் நடைபெறும் வேளையில் பாதுகாப்பான உணவு பொருட்களை உறுதி செய்யும் பொருட்டு, முட்டைகோஸ் தொடங்கி பச்சைப் பட்டனி வரை அனைத்து காய்கறிகளுக்கும் இனி குறிப்பிட்ட பாதுக்காப்பு எண் அதாவது அடையாள எண் அளிக்கப்பட்டு, அந்த காய்கறி எந்த இடத்திலிருந்து தருவிக்கப்பட்டது என்பது முதல் அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டு கோப்பாக வைக்கப்படும். அதாவது உணவு ரீதியான ஏதேனும் குழப்பம் அல்லது பாதுகாப்பு சிக்கல், உதாரணமால பூச்சிக்கொல்லிகள், மண் மாசுபாடு இவற்றின் காரணம் காய்கறிகளில் ஏதேனும் சிக்கல் இருந்து உணவில் நச்சுத்தன்மை ஏற்படும் பட்சத்தில் அந்த உணவு பொருளில் பயன்படுத்திய காய்கறி எவை, அவை எங்கேயிருந்து தருவிக்கப்பட்டன என்று அனைத்து தகவலையும் உடனே அறிய இந்த நடவடிக்கை வசதி செய்யும். ஒலிம்பிக் போட்டிகளின் போது பெய்சிங் மாநகருக்கு 5 ஆயிரம் டன் காய்கறிகள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் காலக்கட்டத்தில் நீர் தேவையை உறுதி செய்யும் பொருட்டு பெய்சிங் மாநகரம் மஞ்சள் ஆற்றை திசை திருப்பக்கூடும் என்று கூறப்படுகிறது. பெய்சிங் மாநகரில் 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் காலத்தில் கூடுதலாக 25 லட்சம் பேர் மாநகரில் வந்துபோகக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள நிலையில் மாநகரின் மொத்த மக்களின் தாகத்தையும் தணிக்க, உலகின் வறட்சியான மாநகரம் என கூறப்படும் பெய்சிங் கடும் இன்னலை சந்திக்கக்கூடும். இப்போதைய நிலை நீடித்தாலே 2008ம் ஆண்டில் பெய்சிங் ஒலிம்பிக் போட்டிகளின் போது 1.1பில்லியன் க்யூபிக் மேட்டர் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும் என சீன சுற்றுச்சூழலியல் அதிகாரிகள் கடந்த மே மாதத்தில் எச்சரித்திருந்தனர். ஒலிம்பிக் விளையாட்டுகளின் போது கூடுதலாக 5.75 மில்லியன் க்யூபிக் மீட்டர் கூடுதலான நீர் தேஎவைப்படும் என்று கணிக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் மோசமான வறட்சிய நிலையை தற்போது அனுபவிக்கும் பெய்சிங் மாநகரம் குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டுக்கான நீரை உறுதி செய்வதோடு, மணற்புயல், காற்று மாசுபாடு ஆகியவற்றையும் எதிர்கொண்டு ஒலிம்பிக்கை வெற்றிகரமாக, பசுமையானதாக நடத்த வேண்டிய சவாலை எதிர்கொண்டுள்ளது.

ஆசிய இளநிலை தடகள போட்டிகள்:

மகௌவில் நடைபெற்ற ஆசிய அளவிலான இளநிலை தடகளப் போட்டிகளில் 23 தங்கம், 11 வெள்ளி, 5 வெண்கலம் ஆக மொத்தம் 39 பதக்கங்களோடு சீனா முதலிடம் பெற்றுள்ளது. சீனா, இந்தியா, ஜப்பான், மலேசியா, தென்கொரியா, குவைத், ஜோர்டான், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் பிரதேசங்களை சேர்ந்த தடகள வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டிகளில் சீனா முதலிடத்திலும், ஜப்பான் 2வது இடத்திலும், கத்தார் 3வது இடத்திலும், சவுதி அரேபியா 4வது இடத்திலும் பதக்கப்படியலில் இடம்பெற்றன. 1 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை பெற்ற இந்தியா 14வது இடத்தில்.

ஆசிய அளவில் தடகள போட்டிகளில் சீனாவின் திறமை மற்ற நாடுகளுக்கு சவாலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2008ம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளை இலக்கு வைத்து கூடுதலான தயாரிப்புகள், பயிற்சிகளில் சீன விளையாட்டுத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் 22 வயதான லியு சியாங் 12.88 வினாடிகளில் ஒட்டி உலக சாதனை படைத்தது இந்த வகையில் குறிப்பிட்டு சொல்லத்தக்கது.