
சீனாவின் ஹாங்சோ நகரில் தேனீர் விடுதிகள் அண்மை ஆண்டுகளில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளன. தேனீர் விடுதிகளில் தேனீர் அருந்தியவாறு உரையாடுவது என்பது, ஹாங்சோ மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறியுள்ளது.
ஹாங் சோ நகரில் சுமார் 400 தேனீர் விடுதிகள் இருக்கின்றன. உரையாடுவது, சதுரங்கம் விளையாடுவது, மெதுவாக தேனீர் அருந்தி பல்வகை சிற்றுண்டியை சுவைப்பது என்பது, அவற்றில் நடைபெறும் வழக்கமான நிகழ்ச்சிகளாகும்.
வெண்ணிலா எனும் தேனீர் விடுதி, 1500 சதுர மீட்டர் பரப்பளவுடையது. அதன் அமைவும் அலங்காரமும் சீனாவின் சிங் வமிச காலத்து தேனீர் விடுதிகளின் பாணியை வெளிப்படுத்துகின்றன.
"ஹாங்சோவில் உற்பத்தியான லுங்சிங் தேயிலை தவிர, சீனாவின் பல்வேறு இடங்களிலுள்ள புகழ்பெற்ற தேயிலையால் தயாரித்த தேனீரையும் வெண்ணிலா தேனீர் விடுதி வழங்குகின்றது.
ஹாங்சோவில் உள்ள தேனீர் விடுதி, ஒவ்வொன்றுக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஹொ எனும் தேனீர் விடுதியின் அலங்காரம், வரலாற்று பண்பாட்டை வெளிப்படுத்துகின்றது.
|