
கிழக்கு சீனாவின் கடலோரத்தில் அமைந்துள்ள செக்கியாங் மாநிலத்தில் காட்சித்தலங்கள் அதிகம். ஹாங்சோ நகரில் சிஹு ஏரி, சிதாங் பட்டினம், ஆறுகளும் ஏரிகளும் கொண்ட பிரதேசமான சாவ்சிங் நகரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
தவிர, ஆயிரம் தீவு ஏரி, யியெதாங் மலை, புதொ மலை உள்ளிட்ட 11 அரசு நிலை காட்சித்தலப் பிரதேசங்கள் உள்ளன. செக்கியாங் மாநிலத்தின் பரப்பளவு, ஒரு லட்சம் சதுர கிலோமீட்டர் ஆகும்.
சுமார் 2100 தீவுகளைக் கொண்ட இம்மாநிலம், சீனாவின் மிக அதிகமான தீவுகளைக் கொண்ட மாநிலமாகும். மக்கள் தொகை சுமார் 4 கோடியே 70 லட்சமாகும். ஹான், வெய், மென், மியோ உள்ளிட்ட தேசிய இன மக்கள் வாழ்கின்றனர்.
இம்மாநிலத்தில் 11 PREFECT நிலை நகரங்களும் 57 மாவட்டங்கள் மற்றும் மாவட்ட நிலை நகரங்களும் உள்ளன. இம்மாநிலத்தில் சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் இருக்கும் அதேவேளையில், சுற்றுலாப் பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன.
இம்மாநிலத்தில் சுற்றுலாத் தலங்கள் அதிக அளவில் இருக்கும் அதேவேளையில், சுற்றுலாப் பொருட்களும் நிறைந்து காணப்படுகின்றன.
|